உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரேஷன் கடை திறப்பு விழா

ரேஷன் கடை திறப்பு விழா

செஞ்சி: செஞ்சி அடுத்த வேலந்தாங்கல் ஊராட்சியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் 13.59 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர் அன்னம்மாள் ஆபிரகாம் முன்னிலை வகித்தார். மஸ்தான் எம்.எல்.ஏ., ரேஷன் கடையை திறந்து வைத்து கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன், பங்கு தந்தை ஜோஸ்வா, மாவட்ட கவுன்சிலர் அகிலா பார்த்திபன், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், ஒன்றிய பொறியாளர் நாராயணசாமி, அவைத் தலைவர் வாசு, முன்னாள் ஊராட்சி தலைவர் அலெக் சாண்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை