உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மின் கம்பங்களில் ரியல் எஸ்டேட் விளம்பர பதாகைகள் ஆக்கிரமிப்பு

 மின் கம்பங்களில் ரியல் எஸ்டேட் விளம்பர பதாகைகள் ஆக்கிரமிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மின் கம்பங்களில் அனுமதியின்றி ரியல் எஸ்டேட் விளம்பர பதாகைகள் வைப்பதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் பொது இடங்களில், அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைக்க தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால், மாவட்டத்தில் அரசியல் கட்சியினர், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் டிஜிட்டல் பேனர் வைக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொடர்பான விளம்பரங்களை மின் கம்பங்கள், சாலையோர மரங்கள் வைக்கும் கலாசாரம் மாவட்டத்தில் தலை துாக்கியுள்ளது. பெரும்பாலும்ள ரியல் எஸ்டேட் விளம்பரங்களை அனுமதியின்றி மின் கம்பங்களில் வைத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் விழுப்புரம் பெருந்திட்ட வளாக பிரதான சாலையில் மின் கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவைகளில் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் தோரணங்கள் போன்று வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியானது. இதையடுத்து, உடனடியாக அந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது. ஆனால், விழுப்புரம் நகராட்சியில் உள்ள பிரதான சாலைகளின் மின் கம்பங்கள், மின் விளக்கு கம்பங்களில் உள்ள விளம்பர பதாகைகள் அகற்றாமல் உள்ளது. இந்த மின் கம்பங்களில் சீரமைப்பு பணிக்கு ஏறும்போது, மின்வாரிய ஊழியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மின் கம்பங்களில் அனுமதியின்றி ரியல் எஸ்டேட் விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ