உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சித்தாத்துார் வயலீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்

 சித்தாத்துார் வயலீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்துார் அறிவுடை நாயகி சமேத வயலீஸ்வரர் கோவிலில் நேற்று சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக காலை 10:00 மணிக்கு அறிவுடை நாயகி அம்மன், வயலீஸ்ரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜையும், மகா சங்காபிஷேகமும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை கலசம் புறப்பாடும், அறிவுடை நாயகி அம்மனுக்கு அபிஷேகமும் நடந்தது. இரவு உற்சவ மூர்த்தி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை