கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
செஞ்சி: திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகத்தினரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பு தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். பழனி, சண்முகம் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். ஏழுமலை, கார்த்திக் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் பன்னீர்செல்வம், கண்ணக்கொனார், ரஜினி ஏழுமலை, செந்தில்குமார், பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.