உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி

விழுப்புரம்: கஞ்சனுார் அருகே 2 பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். கஞ்சனுார் அடுத்த தாயனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மன் மகன் குணசேகரன், 18; இவர், நேற்று முன்தினம் தனது பைக்கில் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர் வெங்கடேசன் மகன் தினேஷ், 23; என்பவருடன் வேம்பி கிராமத்தில் இருந்து கஞ்சனுார் நோக்கி சென்றார். பைக்கை குணசேகரன் ஓட்டினார். அதனுார் அருகே சென்ற போது, எதிரே வேம்பி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், 28; என்பவர் ஓட்டி வந்த பைக் குணசேகரன் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த குணசேகரன், தினேஷ் ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குணசே கரன் இறந்தார். தினேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து, கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ