உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சிந்தாமணியில் டி.ஆர்.ஓ., ஆய்வு

 சிந்தாமணியில் டி.ஆர்.ஓ., ஆய்வு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைப்பதற்கான இடத்தை டி.ஆர்.ஓ., ஆய்வு செய்தார். விக்கிரவாண்டி அடுத்த, அய்யூர் அகரம் சிந்தாமணியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரவி துரை என்பவரது பட்டா இடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தார். இந்நிலையில் நேற்று டி.ஆர்.ஓ., ஹரிதாஸ் இடத்தை ஆய்வு செய்தார். தாசில்தார் செல்வமூர்த்தி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, ஒன்றிய செயலாளர் ரவிதுரை, மாவட்ட அமைப்பாளர்கள் அருள்மொழி, சூர்யா, வருவாய் ஆய்வாளர் தமிழரசன், வி.ஏ.ஓ., சுகுணா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை