மேலும் செய்திகள்
ஜூடோ தெரிவு போட்டி: கல்லுாரி மாணவர் வெற்றி
01-Nov-2025
விழுப்புரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் நடந்த கல்லுாரிகளுக்கு இடையேயான கையுந்து பந்து போட்டியில், விழுப்புரம் அரசு கல்லுாரி மாணவர்கள் வெற்றி பெற்றனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான கையுந்து பந்து போட்டி நடந்தது. சிதம்பரத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த போட்டியில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இதில், இந்த மாணவர்கள் அரை இறுதி போட்டியில் வென்று இறுதி போட்டிக்கு சென்றனர். போட்டியில் மாணவர்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம் உடற்கல்வி துறை அணியை எதிர்கொண்டு விளையாடினர். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி மாணவர்கள் நேர்செட்களில் வென்று முதலிடத்தை பிடித்து பதக்கம் வென்றனர். இந்த கல்லுாரி மாணவர்கள் தொடர்ந்து 5வது முறையாக கல்லுாரிகளுக்கு இடையிலான கையுந்து பந்து போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது.கல்லுாரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை முதல்வர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குநர் ஜோதிபிரியா ஆகியோர் வாழ்த்தி, பாராட்டினர்.
01-Nov-2025