| ADDED : ஜன 25, 2024 11:58 PM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பேரூராட்சியில் தெரு மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விக்கிரவாண்டி பேரூராட்சியில் கீழகொந்தையில் நடந்த 2வது வார்டு சபைக் குழு கூட்டத்திற்கு, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஷேக் லத்திப் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்றார்.கூட்டத்தில், தெரு மின்விளக்கு, சாலை, பொது கழிவறை, கருமகாரிய கொட்டகை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர். கோரிக்கைகள் அனைத்தும் மூன்று மாத காலத்திற்குள் நிறைவேற்றித் தருவதாக சேர்மன் உறுதியளித்தார்.கவுன்சிலர் சுரேஷ் , துப்புரவு ஆய்வாளர் ராஜா, மேற்பார்வையாளர் ராமலிங்கம், பதிவறை எழுத்தர் சேகர், கணனி ஆப்பரேட்டர் கீதா, உதவியாளர் தீனா உட்பட பலர் பங்கேற்றனர்.