உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியும் 2 ஆண்டுகளாக பணி துவங்கவில்லை

 நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியும் 2 ஆண்டுகளாக பணி துவங்கவில்லை

வி ழுப்புரம் நகராட்சி 32வது வார்டு, வழுதரெட்டி முருகன் கோவில் அருகே நகரப்புற நல் வாழ்வு மையம் மற்றும் ரேஷன் கடை அமைந்துள்ளது. இப்பகுதிக்கு, தினமும் பொதுமக்கள் மருத்துவ வசதிக்காகவும், ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் மழைநீர் தேங்குவதால், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பிரச்னையை தீர்க்கும் வகையில், பேவர் பிளாக் சாலை அமைத்து தர வேண்டுமென, வார்டு கவுன்சிலர் வித்திய சங்கரி, தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்துவந்தார். இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு நடந்த நகர மன்ற கூட்டத்தில், வழுதரெட்டி முருகன் கோவில் அருகே உள்ள நகரப்புற நல் வாழ்வு மையம் மற்றும் ரேஷன் கடைக்கு செல்ல 9.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைப்பதற்கு தீர்மானம் (எண்.42) கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இப்பணிக்கான செலவினத்தை வருவாய் நிதியிலிருந்து மேற்கொள்ளவும், மன்ற அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகளாகியும், இந்த திட்டப் பணிக்கு டெண்டர் கோரப்படவில்லை. இப்பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென, தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும், பலனில்லை என கவுன்சிலர் புலம்பி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை