உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வீரசோழன் சார் பதிவாளர் காரில் கைப்பற்றப்பட்ட பணம்; லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

 வீரசோழன் சார் பதிவாளர் காரில் கைப்பற்றப்பட்ட பணம்; லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

நரிக்குடி: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வீரசோழன் சார்பதிவாளர் அசோக்குமார் 44, காரில் இருந்து கணக்கில் வராத ரூ. 3 லட்சத்து 24 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் நவ., 27ல் கைப்பற்றினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். நரிக்குடி வீரசோழன் பத்திரப்பதிவு சார்பதிவாளர் அசோக்குமார் (பொறுப்பு) 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். அதிக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட துணை ஆய்வு குழு அலுவலர் முத்துமாரி, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் கண்காணித்து வந்தனர். நவ., 27ல் மாலை காரில் வீடு திரும்பிய போது, நரிக்குடியில் வழி மறித்து சோதனை செய்த போது பையில் ரூ. 3 லட்சத்து 24 ஆயிரம் கணக்கில் வராத பணம் இருந்ததை கைப்பற்றினர். விசாரணையில் பத்திரப்பதிவுக்காக பல்வேறு நபர்களிடம் லஞ்சமாக பெற்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆய்வு குழு அலுவலர் முத்துமாரி புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் மும்தாஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ