மேலும் செய்திகள்
எஸ்.ஐ.ஆர்., மையத்தில் கலெக்டர் ஆய்வு
01-Dec-2025
விருதுநகர்: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களாக இல்லாத வி.ஏ.ஓ.,க்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கணினி மூலம் இரவு, பகலாக பதிவேற்றி வரும் இவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும், என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் பூபதி வலியுறுத்தினார். மேலும் அவர் கூறியதாவது: எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு கால அவகாசம் போதாது என வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டமைப்பான பெரா மூலம் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது நீட் டித்துள்ளனர். ஓட்டுச்சாவடி அலுவலர்களாகஅங்கன்வாடி ஊழியர்கள் போன்றோர் உள்ளனர். இதில் பலர் பட்டன் அலைபேசி தான் வைத்துள்ளனர். இதனால் கணினியில் பதிவேற்ற வருவாய்த்துறையில் வி.ஏ.ஓ.,க்களை பயன்படுத்தி வருகின்றனர். அரசு ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கும், அதன் மேற்பார்வையாளர்களுக்கும் தான் மதிப்பூதியம் தருகிறது. பதிவேற்ற பணிகளில் உள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு வழங்கவில்லை. எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் எல்லா வாக்காளர்களுக்கும் வழங்கி விட்டாலும், பலர் திரும்பி தரவில்லை. அதையும் வருவாய்த்துறையினர் மூலம்வாங்கி வந்து விட்டோம். வாங்கி வந்ததை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். படிவத்தில் உள்ள கியூ.ஆர்., கோடு மூலம்எந்த பாகம், 2002ல் எங்கு பெயர் இருந்தது, என்பதை தெளிவாக பார்த்து ஆன்லைனில் பதிவேற்றுகிறோம். இரவு பகலாக வேலை பார்க்கிறோம். வி.ஏ.ஓ.,க்கள் ஆள் பற்றாக்குறை உள்ளது. லட்சக்கணக்கான வாக்காளர் படிவங்களை குறைந்த எண்ணிக்கையிலான வி.ஏ.ஒ.,க்கள் தான் பதிவேற்றுகின்றனர். இரவு பகலாக உழைக்கிறோம். பெயரை தவறாக அடித்தால் வாக்குரிமை பாதிக்கப்படும். கிராமத்தில் வி.ஏ.ஓ., தவிர வேறு அதிகாரியை தெரியாது. அதனால் எங்களிடம் தான் மக்கள் கேட்பர். பி.எல்.ஓ., தவிர இப்பணியில் ஈடுபட்ட அத்தனை வருவாய்த்துறையினருக்கும் எஸ்.ஐ.ஆர்., பணிக்கான மதிப்பூதியம் கொடுக்க வேண்டும், என்றார்.
01-Dec-2025