| ADDED : டிச 07, 2025 08:38 AM
சிவகாசி: சிவகாசியில் முன்னாள் முதல்வர் ஜெ., வின் 9 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் சரித்திர தலைவி என்ற தலைப்பில் காணொலி பேச்சுப்போட்டி, நேரடி பேச்சுப் போட்டி நடந்தது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தார். இதில் பள்ளி மாணவர்கள், மக்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.15,000 இரண்டாவது பரிசு ரூ.10,000, 3 வது பரிசு ரூ.5000 வழங்கப்பட்டது. மேலும் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளர் ஜான் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் தேன் ராஜன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கமல் குமார் கிழக்கு பகுதி கழகச் செயலாளர், அர்ஜுன்சாம் கட்சியினர் கலந்து கொண்டனர்.