உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  தொகுதிகளில் குறையும் வாக்காளர்கள் பூத் வாரியாக ஆய்வு செய்யும் அதிகாரிகள்

 தொகுதிகளில் குறையும் வாக்காளர்கள் பூத் வாரியாக ஆய்வு செய்யும் அதிகாரிகள்

ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த படிவங்கள் பதிவேற்றும் பணி நிறைவடையவுள்ள நிலையில், இறப்பு, நிரந்தர இடமாற்றம், ஏற்கனவே பதிவு போன்ற காரணங்களால் ஒவ்வொரு தொகுதியிலும் 20 முதல் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் குறைகின்றனர். அவர்களின் உண்மை நிலை என்ன என்பது குறித்து பூத் வாரியாக அதிகாரிகள் நேரடி கள ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நவ.4 முதல் துவங்கியது. இதற்காக தமிழகத்தில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றும் பணி நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. இறப்பு, வாக்காளர்களை கண்டறிய முடியாத நிலை, நிரந்தர இடம் மாற்றம், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது உட்பட பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் குறைந்தபட்சம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட உள்ளனர். இது 10 முதல் 17 சதவீத அளவிற்கு உள்ளது. டிச.11க்குள் பணிகளை முழு அளவில் முடிக்க வேண்டிய நிலையில் நீக்கப்பட உள்ளவர்கள் குறித்து பூத் வாரியாக ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதற்காக வருவாய் துறை அல்லாத பிற துறைகளை சேர்ந்த ஊழியர்கள் அலுவலர்கள் நேரடி கள ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ