உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சிவகாசி ரயில்வே ஸ்டேஷனிற்கு பஸ்கள் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு

 சிவகாசி ரயில்வே ஸ்டேஷனிற்கு பஸ்கள் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு

சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனிற்கு பஸ்கள் இயக்காததால் ஆட்டோக்களில் அதிக கட்டணத்தில் செல்ல வேண்டியதுள்ளது. இதனால் பஸ்கள் இயக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர். சிவகாசி ரயில்வே வழித்தடத்தில் பொதிகை, சிலம்பு, கொல்லம் எக்ஸ்பிரஸ், பயணிகள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. தினமும் 10க்கும் மேற்பட்ட முறை ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில்வே ஸ்டேஷனிற்கு எந்த வழியில் இருந்தும் பஸ் வசதி இல்லை. இதனால் பயணிகள் ரயில்வே ஸ்டேஷன் வருவதற்கு அல்லது ஸ்டேஷனிலிருந்து செல்வதற்கு அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் தான் வர வேண்டி உள்ளது. சிவகாசி பஸ் ஸ்டாண்டிலிருந்து பைபாஸ் ரோடு காரனேசன் விலக்கு, வேலாயுத ரஸ்தா ரோடு வழியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ்களையோ, அல்லது ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் நகர் பஸ்களை இந்த வழித்தடத்தில் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும். ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து சிவகாசிக்கு வரும் பஸ்சினை ரயில்வே ஸ்டேஷன் வழியாக பஸ் ஸ்டாண்டிற்கு இயக்கினால் ரயில்வே ஸ்டேஷன் மட்டுமல்லாது இந்த வழித்தடத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்லுாரிகள், வங்கிகள், அரசு மருத்துவமனை போன்ற பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனால் இவ்வழியாக பஸ்களை இயக்க பயணிகள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்