| ADDED : டிச 02, 2025 05:41 AM
கோயில் ஊழியரை மிரட்டியவர் மீது வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலையை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டி. இவர் ஆண்டாள் கோயிலில் கார் பார்க்கிங் ஏலம் எடுத்துள்ள நிலையில் சரிவர பணம் செலுத்தாததால் கோயில் நிர்வாகத்தின் சார்பில் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோயில் பணியாளர் கர்ணனை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அசிங்கமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது வழக்கு சாத்துார்: சிவகாசியை சேர்ந்தவர் செல்வம் 40. நேற்று காலை 10:15 மணிக்கு செவல்பட்டியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் சிவகாசி செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்த செல்வம், பஸ் துலுக்கன் குறிச்சி பஸ் ஸ்டாப் அருகில் வேகமாக சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அம்பாசமுத்திரத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மாரிமுத்து 49, கண்டக்டர் அப்துல் நபிக் 55, ஆகியோர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர். ---பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை சிவகாசி: சிவகாசி பள்ளபட்டி ரோடு முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் பூ வியாபாரி ஜெயச்சந்திரன் 57. டிபி நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு மது அருந்தும் பழக்கமும் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் சரியாகவில்லை. இவர் வீட்டில் பிளேடால் தனது கழுத்தில், கையில் அறுத்துக் கொண்டார். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.