உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ராஜபாளையத்தில் கண்மாய்களுக்கு படையெடுக்கும் கழிவு நீர் வாகனங்கள்

 ராஜபாளையத்தில் கண்மாய்களுக்கு படையெடுக்கும் கழிவு நீர் வாகனங்கள்

ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்று வட்டார கண்மாய்களை தேடி கழிவுநீர் வாகனங்கள் படையெடுப்பதை கண்காணிக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். நகராட்சிகளில் உற்பத்தியாகும் குடியிருப்பு கழிவுநீர் செப்டிக் டேங்குகளில் சேகரித்து நிலத்தடி நீரை மாசுபடாமல் அவற்றை முறையாக வெளியேற்ற அல்லது சுத்திகரிப்பு கொண்டு செல்லும் பணிகளில் கழிவுநீர் அப்புறப்படுத்தும் வாகனங்கள் செயல் பட வேண்டும். இதற்காக குடியிருப்பு வாசிகளிடம் இதற்கான கூலி உள்ளிட்ட தொகை வசூலிக்கப்படும். இந்நிலையில் ராஜபாளையம் நகராட்சி பகுதியில் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வீடுகளின் செப்டிக் டேங்குகளில் நிரம்பும் கழிவுநீரை அகற்றுகிறோம் என்ற பெயரில் கழிவுகளை சேகரித்து நகரை ஒட்டியுள்ள கண்மாய்கள் நீர் நிலைகள் ஓடைகளில் திறந்து விடுகின்றன. குடியிருப்புகள் அதிகரிப்பதால் கழிவுகள் அதிகமாகி வெளியேற்றுவதற்கான வாகனங்கள் போட்டி இதன் காரணமாக அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் விதிமீறல் நடந்து வருகிறது. இதுகுறித்து சங்கர்: கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் முறையாக பதிவு செய்வதுடன், வாகன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் விதிகளை மீறி கழிவுகளை கொட்டினால் அபராதம் என்பனவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். விதி மீறுவதால் நீர் நிலைகள் அசுத்தம் அடைவதுடன் நிலத்தடி நீரின் தன்மை பாதிக்கப்படுகிறது. விதிமீறல் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி