மேலும் செய்திகள்
போலி தங்க காசு கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி
1 hour(s) ago
41 மணி நேரம் தொடர் நாம சங்கீர்த்தன பூஜை
23 hour(s) ago
தும்முசின்னம்பட்டியில் மழையால் அழுகிய பயிர்கள்
08-Dec-2025
யோகிராம் சுரத்குமார் ஜெயந்தி விழா
08-Dec-2025
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகளுடன் முகப்பு தோற்றம் புதிய பொலிவுடன் மாற்றி அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் உயர்த்தப்பட்ட நடைமேடை, நடை மேம்பாலம், போதிய இருக்கை வசதிகள், குடிநீர் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ் லிப்ட் அமைக்கும் பணியும் நடக்கிறது. மேலும் இரண்டாவது பிளாட்பார்மில் 500 மீட்டர் நீளத்திற்கு பென்சிங் அமைக்கப்படவுள்ளது. 694 சதுர மீட்டர் பரப்பளவில் டூ வீலர் பார்க்கிங், 470 சதுர மீட்டர் பரப்பளவில் கார் பார்க்கிங், பூங்கா ஆகியவை அமைக்கப்பட உள்ளது.ஸ்டேஷனில் முன்புறத்தில் ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டு முகப்பு தோற்றம் புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கவும் மாதிரி வடிவமைப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகி ஹரி கூறுகையில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தென் மாவட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் கூடுதல் வசதிகள் செய்து தருவது வரவேற்கத்தக்கது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் முகப்பு தோற்றத்தை புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்க ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள மாதிரி வடிவமைப்பு சிறப்பாக உள்ளது.
1 hour(s) ago
23 hour(s) ago
08-Dec-2025
08-Dec-2025