உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  குடியிருப்புகளுக்கு மத்தியில் ஓடையில் கழிவுகள்

 குடியிருப்புகளுக்கு மத்தியில் ஓடையில் கழிவுகள்

சிவகாசி: சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்லும் ஓடையில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் மக்கள் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஓடை செல்கிறது. மழைக்காலங்களில் இந்த ஓடையின் வழியாக தண்ணீர் மீனம்பட்டி கண்மாய்க்கு செல்லும். இந்த ஓடை துார்வாரப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் ஓடை முழுவதுமே முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் கழிவு நீர் வெளியேற வழி இன்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. இதில் கொசு உற்பத்தியாக இப்பகுதி மக்கள் தொற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஓடையை முழுமையாக துார்வாரி கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை