உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

 சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகரைச் சேர்ந்தவர் கிருஷ்ண நாராயணன் 47, விவசாய கூலித் தொழிலாளி. இவர் கடந்த மார்ச் மாதம் தனது வீட்டின் அருகில் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். விருதுநகர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் கிருஷ்ண நாராயணனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க பரிந்துரை செய்தும் நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி