உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 45 கட்சிகள் ஆலோசனை: சீமான் புறக்கணிப்பு

45 கட்சிகள் ஆலோசனை: சீமான் புறக்கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க, வரும் மார்ச் 5ல், தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி பங்கேற்காது,'' என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.மக்கள்தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதிகளை மறுவரையறை செய்தால், தமிழகம் எட்டு தொகுதிகளை இழக்கும் என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, இது குறித்து விவாதிக்க, வரும் மார்ச் 5ல், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு, தமிழகத்தில் உள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சீமான் அளித்த பேட்டி:மக்கள் தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதி மறுவரையறை என்பது, இன்று ஏற்பட்ட பிரச்னை அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பே, இதுபற்றி பேசியிருக்கிறேன். இதற்காக பல போராட்டங்களை தனித்து நின்று, நாம் தமிழர் கட்சி நடத்தியுள்ளது. தொகுதி மறுவரையறை பிரச்னையில், தி.மு.க., அரசின் கருத்தை, நாங்கள் நம்ப போவதில்லை. நீண்ட காலமாக நம்பி நம்பி ஏமாந்து விட்டோம். அதனால், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி தனித்து தான் போராடும். அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

abdulrahim
பிப் 27, 2025 10:14

நீ எப்படி பங்கேற்ப்பாய் மும்மொழி கொள்கையை கொண்டு வருவது உனக்கு பெட்டி தருபவர்கள் ஆயிற்றே பின் நீ எப்படி எதிர்ப்பாய்


VENKATASUBRAMANIAN
பிப் 27, 2025 07:26

இதெல்லாம் திமுகவின் தவறுகளை மேடை மாற்றும் முயற்சி. இப்போது அண்ணா பல்கலைக்கழகம் பிரச்சினை கள்ளச்சாராய பிரச்சினை வேங்கை வயல் பிரச்சினை எல்லாம் மறைந்து விட்டது. இதுதான் திமுகவின் தந்திரம். இதுதான் திராவிட மாடல்


vadivelu
பிப் 27, 2025 05:32

ஊரை ஏமாற்றுவது புரிந்தவர்கள் அதை தவிர்க்கத்தான் செய்வர். மன சாட்சி இல்லாமல் குளத்திடம் கோபம் கொண்டு சாக்கடையில் குளிக்க செல்பவர்கள் கேவலமானவர்கள்.


Raj
பிப் 27, 2025 05:00

சிங்கம் சிங்கிலா தான் இருக்கும், _______ யோட கூட்டத்தில சேராது.


மால
பிப் 27, 2025 04:32

இவனுக கூட்டம் போட்டு என்ன சாதிக்க போறானுக?


ramani
பிப் 27, 2025 04:09

நடக்காத ஒன்றிர்காக ஒரு ஆலோசனை கூட்டம். இது அப்பட்டமான தனது தோல்வியை மறைக்க திமுக எடுத்த மடைமாற்று செயல் தான்


Bye Pass
பிப் 27, 2025 03:32

குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த கதை மாதிரி .. சென்சஸ் எடுக்கவும் இல்லை ..யாரும் இதை பற்றி பேசாத நிலைமையில் அரசு ஆசிரியர் அலுவலர் போராட்டத்தை திசை திருப்ப இந்த திராவிட காமெடி ஆட்டம் ஆரம்பம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை