உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குரூப் - 4ல் மதம் குறித்த கேள்வி: ஹிந்து முன்னணி கடும் கண்டனம்

குரூப் - 4ல் மதம் குறித்த கேள்வி: ஹிந்து முன்னணி கடும் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : தமிழகத்தில் நடந்த குரூப்-4 தேர்வில் மதம் தொடர்பாக இடம்பெற்றுள்ள கேள்விக்கு, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: கடந்த 9ம் தேதி குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. வினாத்தாளில் முதல் கேள்வியே, 'இயேசு கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார்?' என்று கேட்கப்பட்டுள்ளது. இவ்வினாவுக்கு, கிறிஸ்துவர்கள் மட்டுமே சரியான விடையை தேர்வு செய்திருப்பர். இதனால், ஹிந்து இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிக்கும் நோக்கத்தில், வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.இந்த வினா, தமிழ் மொழி பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி சார்ந்த ஆயிரமாயிரம் பண்டைய நுால்கள் தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் உள்ளன. அவற்றை பாடத்திட்டத்தில் இருந்து புறந்தள்ளி, கிறிஸ்துவ மதம் சார்ந்த பாடங்கள் மற்றும் திராவிட புரட்டுக்கள் பாடங்களாக சேர்க்கப்பட்டு, வரலாற்றை அழிக்கும் வேலையை தமிழக அரசு செய்து வருகிறது.அரசு பணியாளர் தேர்வுக்கான போட்டி தேர்வில், இயேசு கிறிஸ்துவின் வருகை என்று கேள்வி எழுப்புவதும் கடும் கண்டனத்துக்குரியது. எனவே, தி.மு.க., அரசு சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காக, தமிழர்களின் அடையாளத்தை, பண்பாட்டை அழிக்கும் விதமாக செயல்பட கூடாது.மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்க கூடாது. நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Hari Haran
ஜூன் 12, 2024 14:36

ஆமா அப்டித்தான் நடக்கும் ஏன்னா இங்க பி ஜே பி இல்லை தெரியுமா


Mohamed Malick
ஜூன் 12, 2024 13:16

இயேசு, அல்லாஹ், வள்ளலார், திருவள்ளுவர் போன்ற ஞானிகள் மதத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அவர்களுக்கு என்று எந்த மதமும் இல்லை, மதங்களை உருவாக்கி இருந்தால் அவர்கள் ஞானிகள் இல்லை அவர்களை வைத்து பிறர் உருவாக்கியதுதான் மதங்கள், இவர்களை போன்ற ஞானிகள் பற்றிய பொது அறிவு கேள்வியாக பள்ளி பாடங்களில் வருவது காலம் காலமாக உள்ள ஒரு நடைமுறைதான், அதை வைத்து மத அரசியல் செய்வதுதான் புதிய முறையாக உள்ளது


தமிழ்வேள்
ஜூன் 12, 2024 12:16

டி என் பி எஸ் சி தேர்வு குழுவில் பாதிரிகளை நியமனம் செய்து விசுவாசம் காட்டும் திமுக, நாளை கிறிஸ்த்தவர்களுக்கு மட்டுமே பதவி, பணிநியமனங்கள் என்று கூட சொல்லும் ..சிந்திக்காமல் ஓசி பிரியாணி சாராயம் இருநூறு ரூவாய்க்கு திமுகவுக்கு, ஓட்டுப் போட்டால் ....


Bala
ஜூன் 12, 2024 11:55

இந்தமாதிரி கேள்விகள் எல்லாம் TNPSC இல் கேட்கப்படுவதே தவறு. திராவிட மாடல் அரசின் தவறுகள். திருத்திக்கொள்ள வேண்டும். இதற்குத்தான் சைவ சித்தாந்தம், வைணவ சித்தாந்தம் போன்ற படிப்புகள் இருக்கிறதே. அங்கு கேட்கலாம்


Apposthalan samlin
ஜூன் 12, 2024 11:09

இயேசு காவியம் என்ற பாட புஸ்தகத்தில் இருந்து கேள்வி எடுத்து இருக்கிறது ராமாயணம் மகா பாரதம் இல் இருந்தும் கேள்வி வந்து இருக்கிறது .இவர் பேசுவது பிரிவினை அதற்கு தான் மக்கள் தீர்ப்பு கொடுத்தனர் நாற்பதுக்கு நாற்பது .


Bala
ஜூன் 12, 2024 11:58

TNPSC தேர்வுகளில் எந்த காவியமும் தேவையில்லை. துறை சம்பந்தப்பட்ட கேள்விகள் எவ்வளவோ இருக்கிறது. மேலும் பொது அறிவு கேள்விகளும் எவ்வளவோ இருக்கிறது. இப்பேற்பட்ட கேள்விகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன்


ram
ஜூன் 12, 2024 11:09

திருட்டு திமுகவை நடத்துவதே மிஸ்ஸியனேரி ஆட்கள்தான் இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த அமைதி மார்கத்தினர் எதற்கு திருட்டு திமுகவை சப்போர்ட் செய்கிறார்கள் என்று தெரியவில்லை, இவர்களுக்கு எந்த வித சலுகைகளும் கிடையாது, ஆட்சி அதிகாரத்தில் எந்த முக்கியத்துவம் இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் அணைத்து கட்சிகளும் இவர்கள் காலை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள் அனால் இவர்கள் எப்போதும் திருட்டு திமுகவுக்கு தான் வோட்டு போடுவார்கள்.


RajK
ஜூன் 12, 2024 11:07

இந்தக் கேள்விக்கு கிறிஸ்தவர்கள் மட்டுமே பதில் சொல்ல முடியும் என்பது ஒரு பக்கம். அடுத்த முறை டிஎன்பிஎஸ்சி எக்ஸாமில் அதிக மார்க் வாங்க படிக்க வேண்டியது பைபிளையும் சேர்த்து. இந்த அரசு மதம் மாற்றத்திற்கு எவ்வளவு ஆதரவு கொடுக்கிறது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். காச வாங்கிகிட்டு 40க்கு 40 கொடுத்த உனக்கு எதுவும் மிஞ்சாது.


Nambirajan
ஜூன் 12, 2024 11:01

Hi also written TNPSC G IV Exam . The below question also asked Hindu religion question and also question asked from Muslim , Christin religions. Please dont do like that. மார்கழித் திங்களில் திருமால் கோயில்களிலும் வீடுகளிலும் ஓதப்படும் பாடல். A திருப்பாவை B திருவாய்மொழி B நாச்சியார் திருமொழி C தேவாரம்


ஆரூர் ரங்
ஜூன் 12, 2024 12:08

மதசார்பற்ற அரசுப்பணிக்கு அன்னிய மத நம்பிக்கைகள் பற்றிய கேள்விகள் எதற்கு?


Pandi Muni
ஜூன் 12, 2024 10:29

ஒரு டுபாக்கூர் வருகையை இன்னொரு டுபாக்கூர் அறிவிச்சிதாமா? கிறுக்கு பயளுகளுக்கிட்ட தமிழ்நாட்டை குடுத்து வச்சிருக்கான் பாரு முதல்ல அவனுக்கு புத்தி புகட்டணும்


ஆரூர் ரங்
ஜூன் 12, 2024 09:31

நாகலாந்தில் எல்லா அரசு நிகழ்ச்சிகளும் பைபிள் வசனங்களைக் கூறி பிரார்த்தனை நடத்திய பிறகே துவங்குகின்றன..விரைவில் இங்கும் அதனை எதிர்பார்க்கலாம்.


Muralidharan raghavan
ஜூன் 12, 2024 10:04

வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவம் அதிகமாக பரவியதற்கு கேரள பாதிரிகள்தான் காரணம். மணிப்பூர் எரிவதற்கு இது ஒரு காரணம் ஆகி விட்டது. கேரளாவில் எப்படி அரசியலில் ஒரு ஆதிக்க சக்தியாக உருவாகிவிட்டார்களோ அதுபோன்று வடகிழக்கு மாநிலங்களிலும் கைங்கர்யத்தை காட்டுகிறார்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை