உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாட்டிலுக்கு 10 ரூபாய் அரசு வேலைக்கு பல லட்சம்

பாட்டிலுக்கு 10 ரூபாய் அரசு வேலைக்கு பல லட்சம்

தமிழகத்தில், தி.மு.க.,வினர், பீஹாரிகளை அவமதிப்பதாகத்தான், பிரதமர் மோடி பேசினார்; தமிழர்கள் அவமதிப்பதாக பேசவில்லை. நேரு, பொன்முடி, தயாநிதி உள்ளிட்ட தி.மு.க.,வினர் பீஹாரிகளை மிக மோசமாக பேசினர். தமிழர் என கூறிக் கொள்ளும் தி.மு.க.,வில் எவ்வளவு தமிழர்கள் இருக்கின்றனர்? சங்க இலக்கியங்களை பற்றி முதல்வரை ஒழுங்காக சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். தி.மு.க., திட்டங்களை, பா.ஜ., காப்பியடிக்கவில்லை. பா.ஜ., கூட்டணி ஆட்சி செய்யும் புதுச்சேரியில், காலை உணவு திட்டம் உள்ளது. அங்கு, முட்டையும் பாலும் கொடுக்கிறோம். அமைச்சர் நேரு மீது 788 கோடி ரூபாய் ஊழல் உட்பட ஏழு அமைச்சர்கள் மீது குற்றச் சாட்டு உள்ளது. தென்சென்னை தத்தளிப்பதற்கு, சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பே காரணம். அரசே, 2,000 கோடி ரூபாய்க்கு ஆக்கிரமிக்க விட்டுள்ளனர். பாட்டிலுக்கு, 10 ரூபாய்; அரசாங்க பணிக்கு, பல லட்சம் ரூபாய் என்ற நிலை தான், தி.மு.க., ஆட்சியில் உள்ளது. - தமிழிசை முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !