உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாடியில் இருந்து விழுந்த 10 வயது சிறுமி உயிரிழப்பு

மாடியில் இருந்து விழுந்த 10 வயது சிறுமி உயிரிழப்பு

தஞ்சாவூர்:தஞ்சாவூரில், கண்ணாமூச்சி விளையாடிய போது, மாடியில் இருந்து தவறி விழுந்த 10 வயது சிறுமி நேற்று இறந்தார். தஞ்சாவூர், கீழவாசல் கவாஸ்கார தெருவைச் சேர்ந்தவர் மைதீன். கூலி தொழிலாளி. இவரது மகள் உமர்பர்தியானா, 10; ஐந்தாம் வகுப்பு மாணவி. நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில், தோழிகளோடு கண்ணாமூச்சி விளையாடினார். அப்போது, மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த சிறுமியை உடனடியாக தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சிறுமி இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி