உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் தொகுதியில் 10 ஆயிரம் ஓட்டு இறந்தவர்களின் பெயரில் உள்ளது: நயினார் நாகேந்திரன் பேட்டி

முதல்வர் தொகுதியில் 10 ஆயிரம் ஓட்டு இறந்தவர்களின் பெயரில் உள்ளது: நயினார் நாகேந்திரன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தென்காசி: முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் பத்தாயிரம் ஓட்டு இறந்தவர்களின் பெயரில் உள்ளது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.தென்காசியில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இபிஎஸ் தலைமையில் மக்களின் ஆதரவுடன் சிறந்த ஆட்சி அமையும். எஸ்ஐஆர்- ஐ வைத்து திமுகவினர் மக்களை குழப்பி, அவர்கள் தமது வேலைகளை பார்த்து வருகின்றனர். பீஹாரில் 65 லட்சம் ஓட்டுக்கள் நீக்கப்பட்டது போல், தமிழகத்தில் சுமார் 75 லட்சம் ஓட்டுக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என தெரிய வருகிறது. இதில் 2002க்கு பின்னர் இறந்தவர்களின் ஓட்டுக்களே இருக்கும். உதாரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நின்று வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் மட்டும் 10 ஆயிரம் ஓட்டுக்கள் இறந்தவர்களின் பெயரில் உள்ளது. அதனை நீக்குவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

கேள்வியும், பதிலும்!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையன், விஜய் தலைமையில் சிறப்பான ஆட்சி அமையும் என கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, ''அவர் ஏற்கனவே அதிமுக அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெற்றுள்ளார். அப்போது அவர் நல்ல ஆட்சி இல்லை என அவரால் கூற முடியுமா? அவர் கூறிய கருத்து வருந்தத்தக்கது'' என செங்கோட்டையன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ