உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1.5 லட்சம் கோடி ரூபாய் எங்கே: அண்ணாமலை கேள்வி

1.5 லட்சம் கோடி ரூபாய் எங்கே: அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய் எங்கே தான் சென்றதோ? என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை அறிக்கை:பகுதிநேர பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு தனியார் விழா மேடையில் என்னை வசை பாடியதாக அறிந்தேன். உங்க வீட்டு பிள்ளைகள் மும்மொழி கற்கலாம், அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகள் மும்மொழி கற்பதற்கு உங்கள் அரசியல் தடையாக இருந்தால் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்புவோம். அதற்காக நீங்கள் என்னை வசை பாடினால், அதன் அர்த்தம், நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதுதான்.சொந்த மாவட்டத்தில், மரத்தின் நிழலில் மாணவர்கள் கற்கும் அவலத்தை கண்டும், காணாமல் இருக்க, ஒரு கல் நெஞ்சம் வேண்டும். எங்கே தான் சென்றதோ கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் செழிக்க, அரசு பள்ளிகளில் பயிலும் எங்கள் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீர்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

RAAJ68
பிப் 21, 2025 15:05

சின்ன வீடு வைத்திருப்பவர்களுக்கு கொடுத்து விட்டோம் அதாவது சிறியதாக வீடு வைத்திருப்பவர்களுக்கு.


venugopal s
பிப் 21, 2025 13:12

இவர் தூக்கத்தில் கனவு கண்டுவிட்டு எழுந்து வந்து அதைப்பற்றி கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்லுவது?


Laddoo
பிப் 21, 2025 10:25

எம்ஜிஆர் கேட்ட கணக்குக்கே 53 வருடமாயும் பதிலில்லே இதுலே அண்ணாமலை கேட்டா மட்டும் இவனுங்க பதில் குடுத்துடுவானுங்களா? திருட்டு பரம்பரையாச்சே


Ramasamy
பிப் 21, 2025 09:52

பொய்மொழி மகேஷ்


P. SRINIVASAN
பிப் 21, 2025 09:40

வெறும் வாய்ச்சவடால் மட்டும்தான்...


Bala
பிப் 21, 2025 09:38

...பாபு


Mario
பிப் 21, 2025 09:25

அந்த 15 லட்சம் எங்கே ? அது மாதிரி...


Bala
பிப் 21, 2025 09:32

PTR சொன்ன பாபுவிடம் உள்ள அந்த முப்பதாயிரம் கோடி எங்கே ?


Sridhar
பிப் 21, 2025 09:54

"அந்த 15 லச்சம்" அதுமாதிரி சொல்லவே இல்லேன்னு சொல்லி ரெண்டு தேர்தல்ல ஜெயிச்சிட்டாங்க. அதுபோல ஒன்னரை லச்சம் செலவழிக்கலன்னு திருட்டு கும்பல் சொல்லமுடியுமா? பதில் சொல்லவே திராணி இல்லாத அசிங்கமான கூட்டம் சம்பந்தமே இல்லாம வேற எதோ உருட்டு உருட்டும்.


Rajasekar Jayaraman
பிப் 21, 2025 13:02

உங்க அம்மா கிட்ட கொடுத்தாச்சு சொல்லலையா.


Sridhar
பிப் 21, 2025 08:51

இதைத்தானே முதலில் கேட்டுருக்கவேண்டும்? எதோ போகிறபோக்கில் சாதாரண விசயம்போல் இப்போ கேக்குறீங்க? வருஷாவருசம் CAG ஆடிட் நடக்கறதில்லயா? ஒன்னரை லச்சம் கோடிங்கறது மிகப்பெரிய தொகையாச்சே அரசு பள்ளிகளின் லச்சனத்தை பார்த்தால் ஒன்னரை லச்சம் கூட செலவழிச்ச மாதிரி தெரியலயே? ஒவ்வொரு பள்ளிகளின் முன்பும் சென்று இதை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உரைக்கும்வரை சொல்லவேண்டும். 50 வருசமாக நாட்டு மக்கள் மனதில் பதிக்கப்பட்ட ஆழமான கரையை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல. ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அவர்களுக்கு உண்மையை விளக்கவேண்டும். சும்மா ட்விட்டரில் ஹாஷ்டாக் போட்ட பத்தாது


Kasimani Baskaran
பிப் 21, 2025 07:17

தீம்க்காவினர் கணக்குக்கேட்டு இருந்தால் இந்நேரம் கட்சியே சுக்கு நூறாக உடைந்திருக்கும்.


ramani
பிப் 21, 2025 06:21

எங்களுக்கும் ஆயிரம் செலவு இருக்கிறது அல்லவா. அதனால் செலவுக்கு எடுத்து கொண்டோம். நிதி தருவதோடு நிற்கணும் எங்கே போனது போன்ற கேள்விகள் கேட்க கூடாது. அது எங்கள் கணக்கில் பத்திரமாக இருக்கும்


முக்கிய வீடியோ