உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

 தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

சென்னை:தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கை: தமிழக மக்கள் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு, பல சீரிய முன்னோடி நலத்திட்டங்களைத் தீட்டி, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டு வதிலும், அவற்றை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப்பணியாற்றுவதிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, கடந்த ஜூலை 1 முதல், மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வுக்கு இணையாக, மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் தற்போது, 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்டு, கடந்த ஜூலை 1 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வால், 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 1,829 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ