ஓட்டு வங்கி அரசியலுக்காக, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், கார்த்திகை தீபத்தை ஏற்ற விடாமல் தடுத்து, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக செயல்பட்ட, மதவெறி தி.மு.க., அரசு மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். த.வெ.க., தலைவர் விஜய், திருப்பரங்குன்றம் முருகன் விவகாரத்தில், தி.மு.க.,வின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளாமல், தன் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்க வேண்டும். தமிழகம், எப்போதுமே ஆன்மிக பூமி. அன்னிய மத படையெடுப்பாளர்களால், வட மாநிலங்களில் ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்ட போதிலும், தமிழகத்தில் ௧,௦௦௦ ஆண்டுகளை கடந்த கோவில்கள் உள்ளன. திருப்பரங்குன்றம் கோவிலில் தீபத்தை ஏற்ற விடாமல் தடுத்து, அநீதி இழைத்த தி.மு.க., அரசின் ஹிந்து விரோத போக்கை, அனைத்து கட்சிகளும் கண்டித்து, மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட வேண்டும். - பிரசாத், செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,