உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு விவகாரம்; இபிஎஸ் மனு தள்ளுபடி

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு விவகாரம்; இபிஎஸ் மனு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக்கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இ.பி.எஸ்., பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w3fx9j1k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தத் தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரியும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இபிஎஸ் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அதிமுக பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும், பொதுச்செயலாளர் நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு செல்லும் என்று தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ராஜா
ஆக 02, 2025 08:39

இன்னொரு மேசை தேடோணும் தவழ்ந்து செல்ல வசதியாக இருக்குமா என்று தெரியவில்லை


sundarsvpr
ஆக 01, 2025 15:08

ஒரு மனதாக தேர்வு என்பதே தவறு. போட்டி நடக்கிறது. போட்டியில் ஒருவர் 10089 மற்றுஒருவர் 10088 வாக்குகள். இந்த தேர்வில் வெற்றியை எப்படியெடுத்துக்கொள்வது? எந்த அரசியில் கட்சியிலும் தேர்தல் நடந்ததாக வரலாறு இல்லை. பி ஜி பி யை தவிர மற்ற கட்சியில் பதவி மாற்றம் நடந்ததாக வரலாறு இல்லை. தெய்வம்தான் முடீவ செய்யவேண்டும் குலுக்கல் முறையில் பிறந்த ஒரு ஆண்டு குகுழந்தைமூலம் தேர்வு செய்யலாம் யை


Anantharaman Srinivasan
ஆக 01, 2025 12:56

இபிஎஸ் மனு தள்ளுபடி. அடி மேல் அடி. இபிஸ்க்கு மற்றுமோர் இடி.


தத்வமசி
ஆக 01, 2025 12:49

நமக்கும் மேலே ஒருவன் இருக்கிறான் குமாரு. ரொம்ப ஆடக் கூடாது. எடப்பாடிக்கு எப்போதுமே இந்த கத்தி தலை மீது தொங்கிக் கொண்டு தான் இருக்கும். இது ஒரு வார்னிங் அவருக்கு. அடுத்தது இரட்டை இலை வழக்கும் வரும். அப்போதும் ஒரு கத்தி அவர் தலை மீது தொங்க விடப்படும். ஆனானப்பட்ட பாகிஸ்தான், சீனா, அமெரிக்காவையே அலற விடும் பிஜேபி தலைவர்களுக்கு எடப்பாடியும், திமுகவும் எம்மாத்திரம் ?


Santhakumar Srinivasalu
ஆக 01, 2025 12:44

நீதி மன்றத்தின் வழக்கினால் தலைக்கு மேலே கத்தி தொங்குகிறது! இவர் ஊர் ஊராக போய் பொய் மூட்டையை அவிழ்த்து கொட்டிககொணடிருக்கிறார்!


N Sasikumar Yadhav
ஆக 01, 2025 12:43

ஆஹா அற்புதமான தீர்ப்பு . இதே மாதிரி தீயமுக கட்சிக்கு சொல்ல முடியுமா . பரம்பரை கொத்தடிமைகள் நிறைந்த கட்சி திருட்டு திமுக


தத்வமசி
ஆக 01, 2025 15:04

ஆர் எஸ் பாரதி சொன்னதையெல்லாம் இப்போ சொல்லாதீங்க. பாரதி இட்ட பிச்சையாலே பதவிக்கு வந்தவர்கள் பலர் உள்ளனர் என்று அவரே கூறி உள்ளார் என்பதை மறந்து விடாதீர்கள்.


திகழ்ஓவியன்
ஆக 01, 2025 12:28

அண்ணாமலைக்கு செக் அவருக்கு எதிரானவர்கள் குசபூ KTR க்கு பதவி பாஜகவில் மீண்டும் கே டி ராகவனுக்கு பதவி கிடைத்துள்ளது. 3 வருடங்களுக்கு முன் பாலியல் வீடியோ கால் புகாரின் பெயரில் இவரின் பதவி பறிக்கப்பட்டது. அண்ணாமலை இருந்தவரை இவர் ஓரம்கட்டப்பட்டு இருந்தார். அடுத்து எடப்பாடிக்கு ஷாக் OPS பிரேமலதா ஸ்டாலின் சந்திப்பு , பாஜகவிற்கு திக் OPS பிரேமலதா ஸ்டாலின் சந்திப்பு இனி யாரும் உடன் ல்லை . இதுஎல்லாம் நேற்று 24 மணி நேரத்தில் தமிழக அரசியலே குலுங்கிடுச்சே, இன்று இபிஎஸ் மனு தள்ளுபடி , ஓரணியில் DMK / ஸ்டாலின் இது தானா


திகழ்ஓவியன்
ஆக 01, 2025 12:28

அண்ணாமலைக்கு செக்


திகழ்ஓவியன்
ஆக 01, 2025 12:21

என்னடா இது பிஜேபி ஐ எதிர்த்தால் இப்படி தானா , OPS க்கு மீண்டும் TOOTHPICKS கிடைத்து விட்டதா


மணி
ஆக 01, 2025 12:17

அந்த நிதி பதி பின்புலம் ?


சமீபத்திய செய்தி