உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; தனியார் கடற்கரைகள், பண்ணை வீடுகளுக்கு மவுசு!

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; தனியார் கடற்கரைகள், பண்ணை வீடுகளுக்கு மவுசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட விரும்புவோர், தனியார் கடற்கரை, பண்ணை வீடுகளை விரும்பி தேர்வு செய்கின்றனர். அமைதியான சூழ்நிலையை மக்கள் விரும்புவது தான் இதற்கு காரணமாக கருதப்படுகிறது.இன்று டிச., 31ம் தேதி மாலை முதலே உலகெங்கும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி விடும். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட்டம் கரை புரண்டு ஓடும். இந்த ஆண்டு, ஆங்கில புத்தாண்டை கொண்டாட விரும்புவோரின் முதல் விருப்பமாக, கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் தனியார் கடற்கரை பங்களாக்களும், பண்ணை வீடுகளும் உள்ளன. 100க்கும் மேற்பட்ட கடற்கரை வீடுகள் இ.சி.ஆர்.,ல் உள்ளன. இங்கு புத்தாண்டை கொண்டாட விரும்புவோருக்காக, தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், புறநகரில் உள்ள பண்ணை வீடுகள், பசுமையான இடங்கள் கொண்டாட்டங்களுக்கான விருப்பமான இடமாக உள்ளன. இது குறித்து பண்ணை வீடுகளின் உரிமையாளர்கள் கூறியதாவது: ஆங்கில புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களுக்கு விரும்புவோர் மத்தியில் கடற்கரை பங்களாக்களே முதல் தேர்வாக உள்ளன.இத்தகைய கொண்டாட்டங்களுக்கு வருவோர், 90 சதவீத மக்கள் சென்னையில் இருந்து வருகின்றனர். வேலூர், பெங்களூரு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் வருகின்றனர். நகர்ப்புற நெரிசலில் இருந்து தப்பிக்கவும், அமைதியான சூழ்நிலையை அனுபவிக்கவும் குடும்பங்களும், நண்பர்களும் தனியார் கடற்கரைகள், பண்ணை வீடுகளை தேர்வு செய்கின்றனர்.வழக்கமாக ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் ஹோட்டல்களை காட்டிலும் இந்த ஆண்டு, கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீடுகள், பங்களாக்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. கடற்கரை வீடுகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் முதல் 1.5 லட்சம் வரை வாடகை வசூலிக்கப்படும். அளவைப் பொறுத்து, 2 BHK முதல் 6 BHK வரை இருக்கும்.பண்ணை வீட்டு வாடகை பொதுவாக ஒரு நாளைக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை இருக்கும். சில கடற்கரை வீடுகள் கேட்டரிங் சேவைகளை வழங்குகின்றன. இருப்பினும் பல விருந்தினர்கள் தங்கள் சொந்த சமையல்காரர்களை அல்லது வெளியில் இருந்து உணவை ஆர்டர் செய்ய விரும்புகிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

r ravichandran
டிச 31, 2024 13:37

கொண்டாட்டத்திற்கு காரணம் மது, போதை பொருள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்பது தான். வரும் நபர்கள் 90 சதவிகிதம் இளைஞர், இளஞ்சிகள் தான். குடும்பமாக வருவது இப்போது குறைந்து விட்டது.


Svs Yaadum oore
டிச 31, 2024 11:39

பிரச்சனை வராமல் போலீசார் கண்காணிக்க வேண்டுமாம் .....பிரச்சனை என்றால் ஏதேனும் விடியல் போதை மருந்து விவகாரமா ??....


கிஜன்
டிச 31, 2024 10:58

இங்கு வருபவர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும்.. நாளை ஏதும் பிரச்னை என்றால் போலீசார் தலை தான் உருளும் ....


சமீபத்திய செய்தி