உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கும் அமைச்சர் மகேஷ்; அண்ணாமலை குற்றச்சாட்டு

பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கும் அமைச்சர் மகேஷ்; அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இரு வெவ்வேறு அரசுப் பள்ளிகளில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், சினிமா மோகத்தை விட்டுவிட்டு, எப்போதுதான் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பாரோ? என்று பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை; பள்ளிக் கல்வித்துறையின் தினசரி சாதனைகள் வரிசையில் இன்று, திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் மது பாட்டிலால் ஆசிரியரைத் தாக்கி மண்டையை உடைத்திருக்கிறார்கள். மற்றொருபுறம், மதுராந்தகம் அருகே புதுப்பட்டு அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து, 5 மாணவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=td4jm9kk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பள்ளிக் கல்வித் துறையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்க, உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ், ப வடிவில் இருக்கைகள் வைப்போம் என, பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கிக் கொண்டிருக்கிறார். சினிமா மோகத்தை விட்டுவிட்டு, எப்போதுதான் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பீர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களே?, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

T.sthivinayagam
ஜூலை 16, 2025 21:48

நடந்த நடைக்கு கூட பலன் இல்லாமல் போனது வருத்தபட வேண்டிய விசயம் தான் என மண்மக்கள் பேசுகிறார்கள்


Chandru
ஜூலை 16, 2025 21:23

That fellow is totally unfit to become a Minister.


babu
ஜூலை 16, 2025 20:13

பிரதமர் எவ்வழியோ அமைச்சர் அவ்வழி


vivek
ஜூலை 16, 2025 21:04

டாஸ்மாக் எவ்வழியோ பாபுவும் அவ்வழி... காலி பாட்டில் மூடி எடுக்க...


Mario
ஜூலை 16, 2025 19:58

5000 Government Schools to Be Shut Down in UP


vivek
ஜூலை 16, 2025 21:05

லண்டன் திருட்டு குடியேறிகள் விரட்டப்படுவார்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை