உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

 முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதை தொடர்ந்து, போலீசார் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை காமாட்சி செல்வகணேஷ் என்ற பெயரில், 'இ - மெயில்' வந்துள்ளது. அதில், 'சென்னை ஆழ்வார்பேட்டை சித் த ரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டில் , சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன' என, மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உத வியுடன், முதல்வர் வீட் டில் சோதனை நடத்தினர். இது புரளி என தெரிய வந்ததும், மிரட்டல் விடுத்த வரை தேடி வருகின்ற னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை