உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: துப்பு கிடைக்காமல் திணறும் சி.பி.சி.ஐ.டி.,

 நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: துப்பு கிடைக்காமல் திணறும் சி.பி.சி.ஐ.டி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு மோசடி தொடர்பாக தேடப்படும் மாணவ - மாணவியரை அடையாளம் காண முடியவில்லை என ஆதார் ஆணையம் கூறிவிட்டதால், சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை, தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் உதித் சூர்யா. இவர், 2019ல் நடந்த நீட் தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்று, தேனி மருத்துவ கல்லுாரியில் சேர்ந்தார். இம்மோசடி வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இப்பிரிவு போலீசார் விசாரித்து, நீட் தேர்வில் முறைகேடு செய்து சேர்ந்த மாணவ - மாணவியரின் பெற்றோர், புரோக்கர்கள் என, 14 பேரை கைது செய்தனர்.தொடர் விசாரணையில், வட மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு மாணவியர், எட்டு மாணவர்கள், தமிழக மாணவர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து, நீட் தேர்வு எழுதியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களின் படங்களை வெளியிட்டு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடுதல் நட வடிக்கையில் இறங்கினர். தேர்வு மையத்தின், 'சிசிடிவி' பதிவுகளை, என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமையிடம் கோரினர். ஆனால், அவை அழிந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால், வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டது. போலீசாரின் இச்செயலுக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்தது. இதனால், சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்களை, வட மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கும் அனுப்பினர்; அப்போதும் தகவல் கிடைக்கவில்லை. தனிநபர் குறித்த அடையாளங்களை சேகரித்து வரும் ஆதார் ஆணையத்திற்கும் படங்களை அனுப்பினர். படங்களில் உள்ள நபர்கள் குறித்த விபரங்களை கண்டறிய முடியவில்லை என, அந்த ஆணையமும் கூறி விட்டது. இதனால், நீட் தேர்வு மோசடி வழக்கில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் உள்ளது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவ - மாணவியர் யார்; அவர்களின் பின்னணியில் இருக்கும் கும்பல் குறித்து துப்பு துலக்க முடியாத நிலையில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை