உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான்கு சிட்கோ தொழிற்பேட்டைகள் திறந்து வைத்தார் முதல்வர்

நான்கு சிட்கோ தொழிற்பேட்டைகள் திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை:திருவள்ளூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, திருவாரூர் மாவட்டங்களில், நான்கு புதிய 'சிட்கோ' தொழிற்பேட்டைகளை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த காவேரிராஜபுரத்தில், 29.4 ஏக்கரில் 12.1 கோடி ரூபாயில், 74 தொழில் மனைகள்; திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை முத்துாரில், 33.6 ஏக்கரில் 15 கோடி ரூபாயில், 91 தொழில் மனைகள். திருவாரூர் மாவட்டம், கொருக்கையில் 15.4 ஏக்கரில், 3.57 கோடி ரூபாயில், 58 தொழில் மனைகளுடன், சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கடம்பாடியில், சிற்ப கலைஞர்களுக்காக, 21 ஏக்கரில், 15.3 கோடி ரூபாயில், 111 தொழில் மனைகளுடன் புதிய சிற்பக்கலை பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. கடலுார் மாவட்டம், மருதநாடு கிராமத் தில் 11.5 ஏக்கரில், 4.39 கோடி ரூபாய் மதிப்பில், தனியார் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு உள்ளது. இவற்றை முதல்வர் ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்தில் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார். அத்துடன் பல் வேறு தொழிற்பேட்டையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை துவக்கி வைத்தார். மேலும், 78.5 கோடி ரூபாய் மதிப்பிலான, 20 புதிய திட்டப் பணிகளுக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், அன்பரசன், தலைமைச் செயலர் முருகானந்தம், சிறு, குறு தொழில்கள் துறை செயலர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை