உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இருமொழிக் கொள்கையை பின்பற்றுவதில் உறுதி: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இருமொழிக் கொள்கையை பின்பற்றுவதில் உறுதி: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். 'இருமொழிக் கொள்கையை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளோம்' என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கான ரூ. 2,152 கோடி கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி நிதியை விடுவிக்க வேண்டும். தமிழகத்தின் கல்வி, சமூக சூழலில் இரு மொழி கொள்கை நீண்ட காலமாக வேரூன்றி உள்ளது. நிதி விடுவிக்கப்படாததால் மாணவர்களுக்கான நலத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், கல்விக்கான நிதி வழங்கப்படாமல் உள்ளது.

கூட்டாட்சி தத்துவம்

நிதி வழங்கும் விவகாரத்தில் அழுத்தம் தருவது கூட்டாட்சி தத்துவத்தை மீறும் செயல். இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். இருமொழிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர உத்தேசிப்பது தமிழக மக்களுக்கு பயன் அளிக்காது. இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளோம். இருமொழிக் கொள்கை, சமூக நீதியின் அடிப்படையில் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

nb
பிப் 21, 2025 06:13

இவங்க மட்டும் ஹிந்தி போஸ்டர் அடிச்சி வோட்டு வாங்குவாங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 20, 2025 20:13

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை அப்படி ஒன்று இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு மிகவும் மோசம் ...... தேர்தல் வாக்குறுதிகள் ஓரளவு கூட நிறைவேற்றப்படவில்லை ..... மின்கட்டணம் உட்பட பல கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன .... எந்த விதத்திலும் ஆட்சி பரவாயில்லை என்று சொல்லும் நிலையில் கூட இல்லை ..... 2026 தேர்தல் வரை மொழி/ இன / சாதி அரசியலை நம்பி திமுக ஓட்டிவிடும் .....


தாமரை மலர்கிறது
பிப் 20, 2025 20:04

ஸ்டாலின் கடிதம் குப்பைத்தொட்டிக்கு தான் செல்லும். உமது அமைச்சர்கள் நடத்தும் பள்ளியில் ஹிந்தி கற்றுக்கொடுக்க மாட்டேன் என்று சொல்ல சொல்லுங்க. மக்களுக்கு ஹிந்தி தேவை இருப்பதால் தானே, அவர்கள் தங்கள் சொந்த பள்ளியில் சொல்லிக்கொடுக்கிறார்கள். அரசு பள்ளி ஏழை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தால், சொந்த பள்ளி பிசினஸ் நடக்காது என்ற ஆதங்கத்தில் தான் ஹிந்தியை எதிர்க்கிறார்கள். ஹிந்தியை ஏற்காதவரை, ஒரு நயாபைசா தமிழகத்துக்கு கிடையாது. முடிஞ்சத பாத்துக்கோங்க.


Dharmavaan
பிப் 20, 2025 20:33

இதை பெரியளவில் பிஜேபி தெருமுனை கூட்டம் போட்டு சொல்ல வேண்டும் மூடர்கள் புத்தியில் உறைக்கும்படி


vbs manian
பிப் 20, 2025 19:42

அந்த இரண்டாயிரம் கோடி வரவில்லை என்றால் மாணவர் எல்லோரும் பள்ளிக்கு வருவதையே நிறுத்தி விடுவார்களா. தனியார் பள்ளிகளிலும் இரு மொழி கொள்கைதான் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர முடியுமா.


M Ramachandran
பிப் 20, 2025 19:36

நீஙகள் அடுத்த முறை டெபாசிட் வாங்க்குவது டவுட் தான். உங்கள் குடும்ப கட்சி முகமூடிகள் குடும்ப பள்ளிகள் பற்றி நாறி போய் கிடக்கு. இதில் அர்த்த மில்லாமால் முயலுக்கு மூனே கால் என்று சாதிப்பதில் இது பழைய தலைமுறையல்ல. பின்னி பெடலெடுக்க கூடிய தலைமுறை.


Balamurugan
பிப் 20, 2025 18:54

இருமொழி கொள்கை என்றால் அது மாநில அரசின் விருப்பம் அப்புறம் எதுக்கு மத்திய அரசிடம் நிதி கேக்குறீங்க? உங்க பித்தலாட்டம் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துகிட்டே இருக்கு


Balamurugan
பிப் 20, 2025 18:51

எந்த மொழியை வைத்து திமுக தமிழகத்தில் ஆட்சியை பிடித்ததோ அதே மொழியாலேயே அழியப்போகுது.


Balamurugan
பிப் 20, 2025 18:44

உங்க கொள்கையில் நீங்க உறுதியாகவே இருங்க. ஆனால் எப்போ உங்க குடும்ப உறுப்பினர்களும் உங்க கட்சிக்காரனுகளும் மும்மொழி கொள்கை வேண்டாம் என்று உங்களுடைய பங்காளிகள் எல்லோரும் எப்போது நீங்க நடத்தும் CBSE பள்ளிகளை இழுத்து மூடுவீங்க? இந்த விஷயத்தில் இருந்து தமிழகத்தில் திராவிட கும்பல் அழியும் நேரம் ஆரம்பமாகுற மாதிரி தெரியுது.


Narasimhan
பிப் 20, 2025 18:28

இவைங்களுக்கு தமிழே ததிக்கினதாம். ஆங்கிலம் சுட்டுப்போட்டாலும் வராது. முதலில் தமிழ் ஆங்கிலம் முறையாக கற்றுக்கொள்ளட்டும். அதன்பின் மூன்றாவது மொழியை பற்றி யோசிக்கலாம்.


கார்வேந்தன்
பிப் 20, 2025 17:24

இந்த கடிதம் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு கையெழுத்திட்டு அனுப்ப பட்டதா. ஆங்கிலமே தெரியாதே. தமிழே தரிகிடதோம் தான். மந்திரிசபைல இருக்கிற சுமார் பத்து மந்திரிங்க பத்தாவது தாண்டாதவங்க. உங்க கட்சி அலுவலகத்துக்கு அறிவாலயம் என்ற பெயருக்கு பதில் அராஜகாலயம் என்று வைக்கலாம் . நமக்கு எதுக்கு இந்த மொழி அரசியல் எல்லாம். இது அந்த காலம் இல்லை , உணர்சியை தூண்டி ஒப்பாரி வைப்பதற்கு . மக்கள் நிறையவே விழிப்படைந்துவிட்டனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை