உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உமர் அப்துல்லா சுவர் ஏறி குதித்த சம்பவம்; மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்

உமர் அப்துல்லா சுவர் ஏறி குதித்த சம்பவம்; மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் முதல் காஷ்மீர் வரை, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.காஷ்மீரில் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த சென்ற முதல்வர் உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது, போலீசாருக்கும், உமர் அப்துல்லாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. ஒரு கட்டத்தில் உமர் அப்துல்லாவை போலீசார் முன்னேறவிடாமல் தள்ளிவிட்டனர்.இந்த வீடியோவை உமர் அப்துல்லா தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். எந்த சட்டத்தின் கீழ் தன்னை தடுத்து நிறுத்தினர் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் உமர் அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை இப்படித் தான் நடத்த வேண்டுமா? என்றும் மத்திய அரசை கண்டித்துள்ளார். காவலர்கள் தம்மை நடத்திய விதத்தை வீடியோ மூலம் உமர் அப்துல்லா எக்ஸ் பதிவில் வெளியிட்டு இருந்தார். அதை தமது பக்கத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், உமர் அப்துல்லாவுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவின் விவரம்; ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. அதே தருணத்தில் அங்கு நடக்கும் தற்போதைய நிகழ்வுகள். அங்கே நிலைமை எந்தளவுக்கு மோசமாகிவிட்டன என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன.தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உமர் அப்துல்லா, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விரும்பியதற்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, சுவரேறி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? இது ஒரு மாநிலத்தின் அல்லது ஒரு தலைவரின் பிரச்னை அல்ல. தமிழகம் முதல் காஷ்மீர் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. காஷ்மீரில் இது நடக்க முடிகிறது என்றால் அங்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு மக்கள் பிரதிநிதிக்கும் இது போன்று நடக்கலாம். ஜனநாயகத்தின் ஒவ்வொரு குரலும் இதை கண்டிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

ganesh Shankar
ஜூலை 15, 2025 11:51

பல பயங்கரவாதிகள் தமிழ் நாட்டில் உள்ளனர் தடுத்து நிறுத்துங்கள் சட்டம்ஒழுங்கை சீர்திருத்தம் செய்க.முதல்வரே


R.P.Anand
ஜூலை 15, 2025 09:41

ஒன்றிய அரசை கண்டித்து பஞ்சாயத்து அரசு உண்ணா விரதம் இருந்து பார்க்கலாமே


R.P.Anand
ஜூலை 15, 2025 09:38

மத வாத தலிவருக்கே இந்த நிலைமை.. காசு கொடுத்து ஓட்டு வாங்கி பொழப்பு நடத்தரவனுக்கு என்னா நிலைமையோ ....


ராமகிருஷ்ணன்
ஜூலை 15, 2025 06:41

தனக்கும் இந்த நிலைமை வந்து விடுமோ என்ற பயத்தில் உளறி உள்ளார். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது, சுவர்களில் ஏறி பயிற்சி செய்து கொள்ளுங்கள். அய்யோ கொல்றாங்க மாதிரி அல்லக்கை ஊடகங்களில் திரும்ப திரும்ப காட்டி கட்சியை வளர்க்கலாம்


Padmasridharan
ஜூலை 15, 2025 06:38

தமிழ்நாட்டின் ஜனநாயக குரல் அநீதியை எதிர்த்து போராட தைர்யம் செலுத்த முடிகிறதா.. அரசதிகரா பிச்சை எடுக்கும் நபர்களால் ஒவ்வொரு தனிமனிதனின் உரிமைகள் பறிக்கப்பற்றிருக்கின்றன..


மணியன்
ஜூலை 15, 2025 06:33

அமெரிக்ககாரன் ஜனநாயகத்தின் காவலன் என்று கூறிக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை குண்டு வீசிகொன்றுள்ளான்,அதுபோல் இங்குள்ள திராவிடம் இங்கே ஜனநாயகம் பேசிக்கொண்டு திராவிட கும்பல் லஞ்சப்பேயை கட்டவிழ்த்து விட்டு மக்களின் குரல்வளையை நெரிக்கின்றது.


Barakat Ali
ஜூலை 15, 2025 05:57

எகிறிக்குதிச்சு கண்டிச்சா சிறுபான்மை வாக்குகள் நிச்சயம் ன்னு மூத்த சார் நினைக்கிறாரோ ????


Barakat Ali
ஜூலை 15, 2025 05:55

எதுக்காக தடுத்தாங்கன்னு புரியாம கண்டன அறிக்கை விட்டு பல்பு வாங்குறதே வழக்கமாப்போச்சு ....


kumar
ஜூலை 15, 2025 00:19

வெடி குண்டு வைத்த தீவிரவாதிகளை சிலிண்டர் வெடித்தது என்று சொன்ன ஆளிடம் வேறென்ன எதிர்பார்க்கலாம்?


vivek
ஜூலை 14, 2025 23:20

சட்டையை கிழித்துக்கொண்டு யாரோ வந்தார்கள்


புதிய வீடியோ