உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் சிறுமி பலாத்காரம்: குற்றவாளிகள் 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை

கோவையில் சிறுமி பலாத்காரம்: குற்றவாளிகள் 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் 2019ம் ஆண்டு 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி கோவை முதன்மை போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பு வழங்கினார்.கடந்த 2019, நவம்பரில் கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள பார்க்கில், 16 வயது சிறுமி தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு சென்ற ஏழு பேர் கும்பல், இருவரையும் தாக்கினர். பின்னர், சிறுமியை பார்க்கில் மறைவான இடத்துக்கு இழுத்து சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8nql785a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போலீசார் விசாரித்து மணிகண்டன். கார்த்திக், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி. கார்த்திகேயன் மற்றும் மணிகண்டன்(வேறொருவர்) ஆகிய ஏழு பேரை கைது செய்தனர். கோவை முதன்மை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட இருந்த நிலையில் இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பகவதியம்மாள், குற்றவாளிகள் ஏழு பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kannan Jothi
ஜூலை 24, 2025 15:57

இந்த மாதிரி கடுமையான கற்பழிப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் அப்போதுதான் குற்றம் குறையும் ஆயுள் தண்டனை என்பது நன்னடத்தை அடிப்படையில் வெளியே வரும் சூழல் ஏற்படலாம் ஏற்படலாம்


Padmasridharan
ஜூலை 19, 2025 06:06

இந்த மாதிரி காதலர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது சென்னை திருவான்மியூர் கடற்கரையிலிருந்து பல காவலர்கள் அவர்களை பிரித்து பணம்/பொருள் புடுங்கி அவர்களின் உடலுறுப்புகளை தொட்டு பார்ப்பதும் அசிங்கமாக பேசி அதட்டி மிரட்டியடித்து வண்டியில் கூட்டி அழைத்து அறைக்கு செல்கின்றனர் சாமி. இது அவரவர்களுக்கே தெரியும். வீட்டிற்கு போன் பண்ணவா இல்லை காவல் நிலையம் வருகிறாயா என்று கேட்டு தங்கள் ஒழுங்கான பணியை காண்பிக்கின்றனர்.


Sudha
ஜூலை 18, 2025 21:10

ஆறு வருடங்கள், மனசு ரொம்ப valikkiradhu


ديفيد رافائيل
ஜூலை 18, 2025 20:06

வேலை செய்யாமலே மூன்று வேளையும் சாப்பாடு


Vijay D Ratnam
ஜூலை 18, 2025 17:52

மக்கள் அன்றாடம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து அரசுக்கு கட்டும் வரிப்பணத்தில் இருந்து எடுத்து சிறுமியை பலாத்காரம் செய்து சிறைக்கு போன 7 பேருக்கு, சாகும் வரை வேளாவேளைக்கு வக்கணையாக சோறு போட்டு வளர்க்க போறாங்களாம். அடடா என்ன ஒரு நல்ல தீர்ப்பு. இதற்கு பதில் இந்த 7 பேர் செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் உண்டு. அவர்களை இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனையில் வைத்து தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களை கொண்டு குற்றவாளிகளின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கண்கள், ரத்தம், இதயம், கணையம், எலும்பு மஜ்ஜை, தோல் போன்ற உறுப்பு தானம் கொடுக்க கூடிய அனைத்து உறுப்புகளையும் ஹைஜினிக்கா அகற்றிவிட்டு மீதம் இருப்பதை பாம்பு பண்ணைகளுக்கு முதலைப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கலாம். வாழும்போது செய்த பாவத்துக்கு சாவதற்கு முன் புண்ணியம் தேடிகொண்டது போல இருக்கும்.


naranam
ஜூலை 18, 2025 17:17

சாகும் வரை தூக்கு என்று தீர்ப்பை மாற்றி வழங்க வேண்டும்..


Indian
ஜூலை 18, 2025 17:14

மேல் முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்க கூடாது


Jack
ஜூலை 18, 2025 16:34

ஏழு பேருக்கு 3.5 லட்சம் தான் அபராதம் ? கள்ள சாராயம் குடிச்சு செத்தா பத்து லட்சம் ?


Thravisham
ஜூலை 18, 2025 16:30

கேடுகெட்ட குற்றவாளிகளே பயந்திடாதீங்க. கொலிஜிய நீதிபதி மற்றும் திராவிட வக்கீல்கள் ஒங்கள காப்பாத்துவாங்க


முக்கிய வீடியோ