மேலும் செய்திகள்
இலங்கையில் தவித்த தமிழக மாணவர்கள் சென்னை திரும்பினர்
2 minutes ago
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்வு
3 minutes ago
சென்னை: பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும், சமையல் காஸ் சிலிண்டர்களை விற்கின்றன. இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் நாளன்று, உள்நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. தமிழகத்தில், கடந்த நவம்பரில், வீட்டு சிலிண்டர், 868.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இம்மாதம், அதன் விலை மாற்றம் செய்யப்படாமல், 868.50 ரூபாயாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக்கு வாங்கியதும், வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில், மத்திய அரசின் மானிய தொகையை, எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும். கடந்த மாதம், 1,750 ரூபாய்க்கு விற்கப்பட்ட, வணிக காஸ் சிலிண்டர் விலை, இம்மாதம், 10 ரூபாய் 50 பைசா குறைந்து, 1,739.50 ரூபாயாக உள்ளது.
2 minutes ago
3 minutes ago