உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய கட்அவுட் விஜய்: த.வெ.க., காமெடி

கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய கட்அவுட் விஜய்: த.வெ.க., காமெடி

மதுரை: மதுரையில் த.வெ.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை 'கட் அவுட்' வடிவில் வந்து தலைவர் விஜய் வழங்கினார். 'அவருடன்' குரூப் போட்டோ எடுத்து உறுப்பினர்கள் மகிழ்ந்தனர். மதுரை த.வெ.க., தெற்கு மாவட்டம் சார்பில் பகுதி, வார்டு நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நேற்றுமுன்தினம் ஜெய்ஹிந்த்புரத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் தங்கபாண்டி வழங்கினார். இதில் கட்சி தலைவர் விஜய்யும் 'கட் அவுட்' வடிவில் பங்கேற்றார். இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் அக்கட்சி உறுப்பினர்கள் 'விஜய் போன்ற பொம்மை உருவப்பட முன்னிலையில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது' என பதிவிட்டிருந்தனர். இதுகுறித்து வலைதளத்தில் 'இந்திய அரசியல் வரலாற்றிலேயே 'கட் அவுட்' மூலம் அடையாள அட்டை வழங்கிய கட்சி த.வெ.க., மட்டும்தான். ஏ.ஐ., தொழில்நுட்பம் உள்ள இக்காலத்தில் இன்னும் 'கட்அவுட்டா'. இதற்கு இல்லையா 'கெட் அவுட்' என 'நெட்டிசன்கள்' கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர். நிர்வாகிகள் கூறுகையில், 'கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் தி.மு.க., துாண்டுதலில் இதுபோன்ற கருத்துகளை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 'கட் அவுட்' கலாசாரத்திற்கு வழிகாட்டியதே தி.மு.க., தானே. விஜய் எந்த வடிவில் வந்தால் என்ன. எங்களை பொறுத்தவரை அவரே நேரில் வந்து வழங்கியதாக கருதுகிறோம். இது எங்களுக்கு பெருமையும்கூட,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை