உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சைபர் கிரைம் போலீஸ் பெயரில் போலி சமூக வலைதளம்: எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

சைபர் கிரைம் போலீஸ் பெயரில் போலி சமூக வலைதளம்: எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சைபர் கிரைம் போலீஸ் பிரிவு பெயர் மற்றும், 'லோகோ'வை பயன்படுத்தி, போலி சமூக வலைதள கணக்குகள் இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்கும்படி, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக காவல் துறையின், 'சைபர் கிரைம்' பிரிவு, பொது மக்களுக்கு, 'டிஜிட்டல்' பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இப்பிரிவின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி, சில நேர்மையற்ற நபர்கள், போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறான கணக்குகள், பொது மக்களிடையே குழப்பத்தை உருவாக்குவது மட்டுமின்றி, நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. இது, பொதுமக்களை தவறாக நடத்தவும் வாய்ப்புள்ளது. மேலும், டிஜிட்டல் பாதுகாப்புக்கான அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.தற்போது, 10 போலி இன்ஸ்டாகிராம், 4 'எக்ஸ்' தள கணக்குகள் கண்டறியப்பட்டு, அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக, '' மட்டுமே உள்ளது. மற்ற கணக்குகளை நம்ப வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Padmasridharan
ஏப் 27, 2025 13:02

காவலர்களையே எதிர்த்து பேசினார்களா.. என்று சாமானிய மக்களை cash & food காக அவமதித்து பேசி, அடித்து எதிர்க்கும் காவல் துறையின் name&logo வை பயன்படுத்தும் தைர்யம் வந்த ஆட்களை எப்படி விட்டுவைக்கிறார்கள். சீக்கிரமாக தங்கள் பெயரை காப்பாற்றி கொள்ளுங்கள் Officers


KRISHNAN R
ஏப் 27, 2025 09:36

எல்லாத்தையும் இணைத்து விடுங்கள்.... திருப்பதி.. உண்டியல் தான் போ ங் கள்


அப்பாவி
ஏப் 27, 2025 07:35

ஒரு சைபர் குற்றவாளியையாவது புடிச்சிருக்கீங்களா? தூக்கில் போட்டிருக்கீங்களா? ஒரு தளத்தை முடக்கினா நூறுதளம் முளைக்கிது. உங்க தளத்தை விட அவை சூப்பரா இருக்கு.


பிரேம்ஜி
ஏப் 27, 2025 07:20

மக்களே தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் அரசு எதற்காக? போலி அமைப்புக்களை கண்டுபிடிக்க போலீசார் முடியாதென்றால் சாதாரண மக்கள் மட்டும் அதை செய்ய முடியுமா? வெற்று அறிக்கை!


Kasimani Baskaran
ஏப் 27, 2025 07:06

சைபர் கிரைம் போலக்கூட போலி... வெட்கம்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை