உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் போலீசாரை சஸ்பெண்ட் செய்ய டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் போலீசாரை சஸ்பெண்ட் செய்ய டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'ஹெல்மெட்' அணியாமல், இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போலீசாரை, 'சஸ்பெண்ட்' செய்ய டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். தவறினால், போக்கு வரத்து போலீசார், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wz2j8ycg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடுத்தடுத்து ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகன ஓட்டிகள் பிடிபட்டால், அவர்களுக்கு அபராதத்துடன், ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய, போக்குவரத்து அதிகாரிகளுக்கு போலீசார் பரிந்துரை செய்கின்றனர்.ஆனால், போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து, பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் ஒரு சிலர், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை படம் பிடித்து, 'வீடியோ' எடுத்து, காவல் துறையின் சமூக வலைதள பக்கங்களில், பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர்.இது, காவல் துறையினருக்கு தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்துகிறது. எனவே, ஒழுங்கீனமான போலீசார் மீது, துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதையடுத்து, மாநிலம் முழுதும் கமிஷனர்கள், எஸ்.பி.,க்கள், 'வாக்கி டாக்கி' வாயிலாக, போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: போலீசார் மற்றும் அதிகாரிகள், போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். காரில் செல்வோர், 'சீட் பெல்ட்' அணிய வேண்டும்.இரு சக்கர வாகனங்களில் செல்லும் போலீசார், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஆனால், இந்த உத்தரவை காவலர் நிலையில் உள்ள ஆண், பெண் போலீசார் பின்பற்றுவது இல்லை. பெரும்பாலும் பணி முடிந்து வீடு திரும்பும் போது, விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இவர்களால் காவல் துறைக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் போலீசாரை உடனடியாக 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். காலை 7:00 மணிக்கு போலீசார் வருகைப்பதிவு சரி பார்க்கப்படும் ரோல்காலில், இரு சக்கர வாகனத்தில் பணிக்கு வந்த போலீசார், தங்களிடம் ஹெல்மெட் இருப்பதை உயர் அதிகாரிகளிடம் காண்பித்து உறுதி செய்ய வேண்டும்.ஹெல்மெட் இல்லாத போலீசார், இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. அவரிடம் சாவியை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அவர், ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற நிறுவனத்தின் ஹெல்மெட் வாங்கி வந்து, அதற்கான ரசீதை காண்பித்தால் மட்டுமே, அவரிடம் சாவியை கொடுக்க வேண்டும் என, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

SP
ஏப் 21, 2025 17:23

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது அதில் கவனம் செலுத்துங்கள். ஹெல்மெட் போடாமல் சென்று விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தொகை கிடையாது என்று அறிவித்தால் தேவையானவர்கள் போட்டுக் கொள்கிறார்கள் அதை விட்டுவிட்டு தீவிரவாதிகளை பிடிப்பது போல ஒவ்வொரு ஊர்களிலும் காவல்துறையினர் மாலை நேரத்தில் தவம் கிடக்கின்றார்கள்


Padmasridharan
ஏப் 21, 2025 11:52

"மக்களுக்கு முன்னுதாரணமான இருக்க வேண்டிய காவல்துறை" அதிகார பிச்சை எடுத்து, லஞ்சம் வாங்குவது, தங்கள் வண்டியில், அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லைகள் கொடுப்பது நடக்கிறது. இதனால் இளைஞர்களை லஞ்சம் கொடுப்பது சரி என்று மாற்றி உள்ளார்கள். இந்த இளைஞர்கள் வீட்டில் பொய் சொல்லி பழக்கப்பட்டுள்ளனர். கடற்கரையில் தனியாக / கூட்டாகவோ இருந்தால் அடித்து, மிரட்டி, கேவலமாக பேசுகின்றனர். மது_மாது வோடு இருந்தால் மொபைல் ஃபோனை பிடுங்கி பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள்.. ஒரு helmet பிரச்சனை மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ மாற்றவேண்டும். தவறு செஞ்சா suspension / transfer என்ற தைர்யம். Dismiss பண்ண முடியாது என்ற நம்பிக்கை


Barakat Ali
ஏப் 21, 2025 09:49

முன்னேறிய மாநிலத்தில் இப்படிப்பட்ட அறிவிப்புகள் சகஜமப்பா....


Sesh
ஏப் 21, 2025 08:59

சிறந்த நகைச்சுவை .


பாமரன்
ஏப் 21, 2025 08:47

என்னாது காவலர்கள் டூவீலர்ல போகும் போது ஹெல்மெட் அணியாததால் காவல் துறைக்கு அவப்பெயரா? அதனால் சஸ்பென்ட்.. ஆனால் லஞ்சம் வாங்கி மாட்டினா ஒன்னும் இல்லையா? ஓஹோ மாட்டிக்காம வாங்கும் ட்ரைனிங்கு ட்ரான்ஸ்ஃபரா? வெளங்கிடும் ஸ்காட்லாந்து யார்டு... இன்னும் தோலுரிஞ்ச லத்தியோட போயி தள்ளுவண்டிகாரண்ட் ஓசியில் வாழைப்பழம் வாங்கி திங்கிற நிலையில் வச்சிட்டு இருக்கிறதை மாத்துங்கய்யா... ரோட்டில் போலீஸை பார்த்தா பாமரனுக்கும் கம்பீரமான ஸ்மைல் வரனும்...


GMM
ஏப் 21, 2025 08:16

எந்த உத்தரவும் விதி இருக்கா அல்லது சிறப்பு அதிகாரம் இருக்கா என்று பார்த்து சங்கர் ஐய்யா போட வேண்டும். வழக்கு ஆட்டி படைத்து விடும். நீதிபதி உத்தரவு பெற்று நீங்கள் உத்தரவு போடுவது நல்லது. தற்போது சட்டம், நிர்வாகம் ஒரே உறையில்?


அப்பாவி
ஏப் 21, 2025 06:58

சஸ்பெண்ட் நா வேலைக்கே வர வேண்டாம். சம்பளம் வுட்டிற்கு வந்துரும். மாமூல் வராது.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஏப் 21, 2025 06:38

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல ஹெல்மெட் மட்டுமே இவங்க கண்ணுக்கு தெரியும். போதை பொருளாகிய மது விற்கும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு. விளங்கிடும்


சமீபத்திய செய்தி