உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொது தொகுதியில் எஸ்.சி., வேட்பாளர்: தி.மு.க., தலைமை அதிரடி முடிவு

பொது தொகுதியில் எஸ்.சி., வேட்பாளர்: தி.மு.க., தலைமை அதிரடி முடிவு

சென்னை : வரும் சட்டசபை தேர்தலில், பொதுத் தொகுதியில், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்த, தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதற்காக வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதி மற்றும் வேட்பாளரை அடையாளம் காணும் பணியில், அக்கட்சி மேலிடம் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

'சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக, முழு அர்ப்பணிப்புடன் தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். அதற்கு ஏற்ப, பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'சமூக நீதி அரசு' என்றால், தி.மு.க., ஏன் பொதுத் தொகுதியில், எஸ்.சி., வேட்பாளரை நிறுத்துவதில்லை? தி.மு.க.,வில் திறமையான நபராக விளங்கும் ஆ.ராஜா, கடந்த லோக்சபா தேர்தலில், தன் சொந்த மாவட்டமான பெரம்பலுாரில் போட்டியிடாமல், தனி தொகுதியான நீலகிரியில் ஏன் போட்டியிட்டார்' என, கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வரும் சட்டசபை தேர்தலில், பொதுத் தொகுதியில், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவரை, வேட்பாளராக களமிறக்க, தி.மு.க., மேலிடம் முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப, தொகுதி மற்றும் வேட்பாளரை அடையாளம் காணும் பணியில் கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது. கடந்த தேர்தலில், சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில், பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றது. எனவே, இம்மாவட்டங்களில் ஒரு தொகுதி, குறிப்பாக சென்னையில் படித்தவர்கள், எஸ்.சி., சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதி, தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 16, 2025 13:00

ஒவ்வொரு சாதிக்கும், ஒவ்வொரு மதத்துக்கும் தொகுதி ஒதுக்குனா சாதி, மதமற்ற சமுதாயம் அமைச்சுரலாம் .....


RAJASEKAR
ஜூலை 16, 2025 12:41

எங்கு நின்று ஜெயித்தாலும் அந்த உடைந்த பிளாஸ்டிக் சேர் மாறாது.


MARAN
ஜூலை 16, 2025 11:50

தலைகீழாக நின்னு தண்ணி குடித்தாலும் , நீங்கள் நான்கரை ஆண்டாக ஆடிய ஆட்டத்திற்கு , டெபாசிட் கிடைப்பதே சந்தேகம் தான்.


saravan
ஜூலை 16, 2025 11:13

அப்போ அடுத்த தி மு க தலைவர் கே ன் நேரு தான் வாழ்க வரும்கால முதல்வர்


Venkateswaran Rajaram
ஜூலை 16, 2025 11:07

யாரை நிறுத்தினாலும் ஊழல், கொள்ளை என்ற இவர்கள் கொள்கையில் மாற்றம் இருக்காது என்பது நிச்சயம்


Er. G.Selvaraju
ஜூலை 16, 2025 10:54

தலித் எழில்மலை பா.ம.க வில் இருந்து அ.தி.மு.க வந்தபின் திருச்சி பொது தொகுதி இடைத்தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்தார் ஜெயலலிதா அம்மையார்


pandit
ஜூலை 16, 2025 10:40

திமுக தலித் முதல்வராவது எப்போது


anonymous
ஜூலை 16, 2025 10:35

சென்னையில் ஃபிரியா


Rengaraj
ஜூலை 16, 2025 10:32

என்ன அரசியல் சிஸ்டம் இது ? புரியவில்லை. எதிர்க்கட்சிகள் கேள்விக்கு பதிலடி என்றவகையில் செயல்பட துடிக்கிறார்களே பொது தொகுதியோ, அல்லது தனித்தொகுதியோ, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களை மக்கள் தகுதி அடிப்படையில் பார்க்கவேண்டுமா ? அல்லது ஜாதி அடிப்படையில் பார்க்கவேண்டுமா ? ஜாதி மட்டும் பார்த்தால் போதும், மற்றபடி பொறுக்கியாக , ஊழல் புரிபவனாக , பக்கா கிரிமினலாக இருக்கலாம் தப்பில்லை என்று சொல்லவருகிறார்களா ?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 16, 2025 10:11

பொது தொகுதொகுதியான திருச்சியில் தலித் எழில்மலையை போட்டியிட செய்து ..எம்பி ஆகியவர் ஜெயலலிதா ..நீங்கள் இப்போதுதான் முடிவெடுக்கிறீர்கள் .. அற்புதமான சமூகநீதி கட்சி திமுக ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை