உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க., - எம்.எல்.ஏ., மகனுக்கு எச்சரிக்கை

நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க., - எம்.எல்.ஏ., மகனுக்கு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில், முதல்வர் வருகையின் போது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான தீர்ப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க., -- எம்.எல்.ஏ., மகனை, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், நேற்று மதியம், சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். முதல்வரை வரவேற்று தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஒருவர், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.அவரை போலீசார் அழைத்துச்சென்றனர். அவரிடம் நிருபர்கள், 'என்ன கோஷம் எழுப்பினீர்கள்?' என்று கேட்டதற்கு, 'திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத கலவரத்தை துாண்டுகின்றனர்' என்றார். அப்போது, போலீசார் அந்த நபரின் வாயை மூடி, போலீஸ் அதிகாரியின் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனின் மகன் அக்ஷய், 22, என்பதும், டில்லி சட்ட கல்லுாரியில் படிக்கிறார் என்பதும் தெரிந்தது. அவரை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். அக்ஷய், தன் தந்தை மார்க்கண்டேயனுடன் எட்டையபுரத்தில் அளித்த பேட்டி:நீதிபதி சுவாமிநாதன் பாசிச கருத்துகளையும், சொந்த கருத்துகளையும் தீர்ப்பில் இணைத்து எழுதியதை போல எனக்கு தென்பட்டது. அவர் ஒரு நிகழ்ச்சியிலும், தீர்ப்பு மூலமாக தான் தீபத்தை ஏற்ற முடியவில்லை; அரங்கத்தில் தீபம் ஏற்றுகிறேன் என, பேசியிருந்தார்.தொடர்ந்து, முதல்வர் புரட்சிகரமான ஒரு அறிக்கையை கொடுத்தார். சட்டரீதியாக நாம் பார்த்து கொள்ளலாம் என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த தைரியத்தில் தான் விமான நிலையத்தில், 'நீதிபதி சுவாமிநாதன் ஒழிக' என, கோஷம் எழுப்பினேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Sun
டிச 08, 2025 17:32

பெத்த அப்பனுக்கு மறுபடியும் எம்.எல்.ஏ சீட் வாங்க இப்படியும் ஒரு வழி இருக்கா?


Arul Narayanan
டிச 08, 2025 17:31

மார்க்கண்டேயன் அதிமுக எம்எல்ஏவாக இருந்து எடப்பாடி சீட் கொடுக்காததால் உடனடியாக கட்சி மாறி உடனே சீட் வாங்கி ஜெயித்து மீண்டும் எம்எல்ஏ ஆனவர். அதிமுகவிலேயே நின்று ஜெயித்து இருந்தால் கதை வேறு. ஃபாசிசம் எல்லாம் கண்ணுக்கு தெரிந்து இருக்காது.


Rathna
டிச 08, 2025 12:47

நல்ல குடும்பத்தை சார்ந்தவர்கள் சட்டம் படித்தது அந்த காலம். ஆனால் இப்பொது?


Natchimuthu Chithiraisamy
டிச 08, 2025 12:44

குட்டிகளும் ஊளையிடுகிறது.


Venugopal S
டிச 08, 2025 11:55

தவறான தீர்ப்பு அளித்தவருக்கு தண்டனை கொடுக்காமல் அதற்கு எதிராக குரல் கொடுத்தவரைத் தடுப்பது தான் ஜனநாயகமா?


Arul Narayanan
டிச 08, 2025 14:06

வழக்கு போட்டு தண்டனை வாங்கி தர வேண்டியது தானே? அதை விட்டு விட்டு அநாகரிக கூச்சல் ஏன்?


Prabu
டிச 08, 2025 11:07

இவனை டில்லியில் ABVPவினர் ஓட ஓட விரட்டணும் செய்வார்களா?


K V Ramadoss
டிச 08, 2025 19:02

அவர்களுக்கு தெரிவித்தால் செய்வார்கள்.. இவர் டெல்லியைவிட்டே ஓடிவந்துவிடுவார்,,


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
டிச 08, 2025 09:58

நீதிபதியின் தீர்ப்பில் குறைகள் இருந்தாலும், அடுத்தவனை ஏமாற்றி சொத்து சேர்த்து அந்த காசில் டில்லி வரை சென்று படிக்கின்ற திமிர் இந்த கோசம். போடுங்கடா போடுங்க. உங்க ஆட்டம் விரைவில் முடியும்.


Krishna
டிச 08, 2025 09:55

Punish him Without Mercy


Ramesh Trichy
டிச 08, 2025 09:44

டில்லி சட்ட கல்லுாரியில் படித்து கொண்டு, சட்டதை மதிக்க தெரியவில்லை. இவனெல்லாம் படித்து.... "டாக்டர் அம்பேத்கர் வருத்தப்படுவார்". முதலில் சட்ட கல்லூரியில் இருந்து வெளியேற்ற பட வேண்டியவன். திமுகவில் அடுத்த படியேற முயற்சி, அதனால் கொடுத்த காசை விட அதிகமா கூவுரான் .


Sridhar
டிச 08, 2025 09:36

Hindi theriyumo


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை