வாசகர்கள் கருத்துகள் ( 2 )
They should have used Drone for surveillance, and a robot to carry out the injection process.
குற்றவாளி ரோலெக்ஸ் யானை இங்கே, காயமடைந்த கால்நடை மருத்துவர் விஜயராகவன் புகைப்படம் எங்கே சாமி. கிடைக்கவில்லையோ
கோவை: கோவையில் மயக்க ஊசி போடும் முயற்சியின் போது, காட்டு யானை தாக்கியதில் டாக்டர் படுகாயம் அடைந்தார்.கோவை மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், தொடர்ந்து சேதங்களை ஏற்படுத்தி வரும் ரோலெக்ஸ் என்றழைக்கப்படும் யானையை பிடிக்க, வனத்துறையினர், வனக்கால்நடை டாக்டர்கள் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை, 1:30 மணிக்கு, புள்ளாக்கவுண்டன்புதூர் பகுதியில், ஆனைமலை புலிகள் காப்பக உதவி கால்நடை டாக்டர் விஜயராகவன் மற்றும் வனத்துறையினர், 'ரோலெக்ஸ்' யானையை பின்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, ரோலெக்ஸ் யானை தாக்கியதில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி கால்நடை டாக்டர் விஜயராகவன் காயமடைந்தார். தற்போது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.