உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுக்கோட்டையில் இரட்டைக்கொலை; தனிப்படைகள் அமைத்து விசாரணை

புதுக்கோட்டையில் இரட்டைக்கொலை; தனிப்படைகள் அமைத்து விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அண்ணன், தம்பியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்றிரவு ஆவுடையார்கோவில் அருகே உள்ள காமராஜபுரம் பகுதியில் இருவர் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான கண்ணன்,35, கார்த்திக்,29, என்பது தெரிய வந்தது. இருவரையும் கொலை செய்ததற்கான காரணம் என்ன? கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.புதுக்கோட்டையில் இரட்டைக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவுடையார் கோவில் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அண்ணன், தம்பி கொலையைக் கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

m.arunachalam
ஜூலை 25, 2025 18:38

அவ்வளவு வலுவான காரணம் இருக்கலாம் . சாலை மறியல் செய்பவர்கள் ஒன்றை உணர வேண்டும் . ஆணவ , அதிகாரம் எங்கேனும் நடத்தையில் இருந்ததா ?.எந்த விதத்திலும் மறியல் குற்றங்களை குறைக்காது . தெளிதல் நலம் .


முக்கிய வீடியோ