உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

முதல்வரின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒரே நேரத்தில், 500 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், அதர்வா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படங்களை தயாரிப்பவரும், முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய உறவினருமான ஆகாஷ் என்பவர் வீட்டில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் பாஸ்கரன். இவரது மகன் ஆகாஷ். இவர், 'டான் பிக்சர்ஸ்' என்ற நிறுவனம் வாயிலாக, சினிமா படங்களை தயாரித்து வருகிறார். ஒரே நேரத்தில், 500 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து, தனுஷ் நடிப்பில், இட்லி கடை சிவகார்த்திகேயன் நடிப்பில், பராசக்தி அதர்வா நடிப்பில், இதயம் முரளி மற்றும் சிம்பு நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.குறுகிய காலத்தில், தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் ஆகாஷின் அபார வளர்ச்சி, தமிழ் திரையுலக வட்டாரத்தையே பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து; அவரது மகள் தேன்மொழியை, கடலுாரைச் சேர்ந்த தொழில் அதிபரும், 'கவின்கேர்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன் திருமணம் செய்துள்ளார். இவர்களின் இரண்டாவது மகள் தாரணி. அவரது கணவர் தான் இந்த ஆகாஷ்.முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய உறவினரான ஆகாஷ், தாரணி ஆகியோர், சென்னை தேனாம்பேட்டையில், கே.பி.என்.தாசன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஆகாஷ் ஈடுபட்டு வருவதாக, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில், ஆகாஷ் வீட்டில் நேற்று காலை 6:00 மணியில் இருந்து சோதனை நடத்தினர்; முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். ஆகாஷின் கார் ஓட்டுநரிடமும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

S.jayaram
மே 17, 2025 22:19

ஊழல் என்று சொல்வார்கள் மக்களிடம், மக்களும் அதைவியப்பாக அதிர்ச்சியுடன் பார்ப்பார்கள் ஆனால் கடைசியில் பேரம் எல்லாம் முடிந்தவுடன் கேசை உப்புசப்பில்லாமல் ஆக்கி வழக்குக்கு தேவையான ஆதாரங்களை நீதி மன்றத்தில் காலத்தில் சமர்ப்பிக்காததால் குற்றவாளிகளை நீதிபதிகள் விடுதலை செய்வார்கள். இதுதான் 2 கி வழக்கில் நடந்தது. இப்போ நடக்கும் டாஸ்மாக் கேசும் அப்படித்தான் போகும் ஏனென்றால் இதிலும் ஏறத்தாழ 1,60,000 கோடி பணம் ஊழல் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. நாளை இதிலும் சாட்சிகள் பிறழ் சாட்சிகளாகலாம், அல்லது காணாமல் போகலாம் அப்போது நீதிமன்றத்தில் நீதிபதிகள் இதையே காரணமாக கூறி குற்றவாளிகள் விடுதலை செய்யப் படுவார்கள். ஆக அதில் ஒரு 1,76,000 கோடி, இது ஒரு 1,60,000 கோடி ஆக மொத்தம் ஒரு கட்சி 3,36,000 கோடி பணத்தை சுருட்டுகிறது எதுவும் செய்யமுடியவில்லை இந்நாட்டின் சட்டத்தால், ஆனால் பணமும் மீளவில்லை குற்றவாளிகளும் தண்டிக்கப் படவில்லை. இதைவிட கேவலமான சட்டங்கள் , அரசுகள் எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை.


RajendraK
மே 17, 2025 16:52

The blow to DMK will be deadly in 2026, no rising sun thereafter in TN


raghavan
மே 17, 2025 16:02

பலே.. பலே.. கூடிய விரைவில் ED சூரியனையே சுவிட்ச் ஆப் செய்துவிடும் போல இருக்கே.


SUBRAMANIAN P
மே 17, 2025 14:06

யோவ்.. இவுங்க குடும்பத்துல மொத்தம் எத்தனை உறுப்பினர்கள்தான்யா.. நமக்கு தலை சுத்துது.. இவுங்க குடும்பத்துல பொறக்கம போயிட்டோமே.. சிறு குழந்தையா இருக்கும்போதே நல்ல செட்டில் ஆகி இருக்கலாம்..


V GOPALAN
மே 17, 2025 13:31

Without chief blessing no business can be done Im tamilnadu now. So the chief thiefshould be booked


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 17, 2025 12:26

வழக்கம்போல தொட்டுப்பாரு ன்னு சவால் உடவேண்டியதுதானே ??


angbu ganesh
மே 17, 2025 11:22

கருப்ப வெள்ளையடிக்கறானுங்க


பேசும் தமிழன்
மே 17, 2025 11:16

அவனவன் 500 ரூபாய் க்கு திண்டாடும் நிலையில்.... இவர்களுக்கு 500 கோடி சர்வசாதாரணமாக கிடைக்கிறது.


என்னத்த சொல்ல
மே 17, 2025 10:31

ஐயோ ED ரைடா.. ரொம்ப பயமா இருக்கு....


Kasimani Baskaran
மே 17, 2025 09:48

மாடல் ஜனாதிபதிக்கே அதிகாரம் இல்லை என்று நீட்டை நீக்கிவிடலாம் என்று கனவு கண்டது.. அனைத்திலும் மண். ஆனால் தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலம் போகவைத்தது சிறப்பு..


சமீபத்திய செய்தி