மேலும் செய்திகள்
டில்லியில் ஆர்ப்பாட்டம் விவசாயிகள் முடிவு
21-Jul-2025
சென்னை:'முழுமையாக சோதனை செய்யப்படாத, மரபணு மாற்று பயிர்களுக்கு, தமிழகத்தில் அனுமதி இல்லை என்று அரசாணை பிறப்பிக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, விவசாயிகள் கடிதம் எழுதி உள்ளனர். இது குறித்து, மரபணு மாற்றங்கள் இல்லாத தமிழகத்திற்கான கூட்டுக் குழு நிர்வாகிகள், அரச்சலுார் செல்வம், அனந்தசயனம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதம்: மத்திய அரசு கடந்த மே 4ம் தேதி, கமலா மற்றும் பூசா டி.எஸ்.டி., என, இரண்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் ரகங்களை அறிமுகம் செய்துஉள்ளது. ஏற்றுக்கொள்ள முடியாது இதனை, மிகவும் பாதுகாப்பான, புதிய மரபணு தொழில் நுட்பங்களை கொண்டு உருவாக்கி உள்ளதாக கூறியுள்ளனர். இந்த இரண்டு நெல் ரகங்களையும், உயிரியல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தாமல் வெளியிட்டுஉள்ளனர். மரபணு மாற்றம் என்ற பெயரில் பயிர்களை திணிக்க, மத்திய அரசு கூறும் காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக உள்ளன. நடவடிக்கை வேண்டும் மரபணு மாற்ற பயிர்களின் உற்பத்தி பொருட்களை உண்ணும், கால்நடைகள் மற்றும் ஆய்வு விலங்குகளுக்கு, புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதை, பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. இதுனால், தமிழக மக்களும், சோதனை எலி கள் போல் பாதிக்கப்படுவர். மரபணு மாற்ற தொழில் நுட்பங்களுக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் விதை உரிமையை இழப்பர். தனியார் விதை நிறுவனங்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். மகரந்த கலப்பு வாயிலாக, பாரம்பரிய மற்றும் பிற நெல் ரகங்களும், மரபணு மாற்றிய நெல் ரகங்களாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. இயற்கை விவசாயத்தில், முன்னணியில் உள்ள, தமிழக இயற்கை விவசாயம், பெரிய அளவில் பாதிக்கப்படும். முழுமையாக சோதிக்கப்படாத, எந்த விதமான மரபணு மாற்று பயிர்களுக்கு, தமிழகத்தில் அனுமதியில்லை என்று, அரசாணையை பிறப்பிக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
21-Jul-2025