உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பல வாய்ப்புகள் கொடுத்தும் பயன்படுத்திக் கொள்ளவில்லை

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பல வாய்ப்புகள் கொடுத்தும் பயன்படுத்திக் கொள்ளவில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்:

காஞ்சிபுரத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நடத்திய பொதுக்கூட்டத்துக்கு யாரும் வரவில்லை; இயற்கைக்கும் கூட பிடிக்கவில்லை. அதனால் தான், மழை வந்து கெடுத்து விட்டது. அவருக்கு பல வாய்ப்பு கொடுத்தும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

டவுட் தனபாலு:

பன்னீர்செல்வம் முதல்வரா இருந்தப்ப, 'கட்சி தலைமையும், ஆட்சி தலைமையும் ஒரே கையில் இருக்கணும்'னு சசிகலாவிடம் பிராது கொடுத்து, பன்னீரின் பதவியை பறிச்சிட்டு, இப்ப அவருக்கு பல வாய்ப்பு கொடுத்தோம்னு கூசாம சொல்றீங்களே... பன்னீர்செல்வம் இன்று இருக்கும் பரிதாப நிலைக்கு, பிள்ளையார் சுழி போட்டதே நீங்க தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:

'இண்டியா' கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான், பா.ஜ.,வின் நோக்கம். அவர்களின் ஆத்திரம் தி.மு.க., மீது தான். அக்கட்சித் தலைவரின் மகன் உதயநிதி என்பது தான் அவர்கள் பிரச்னை. அதனால் தான், அவரை இழிவுபடுத்துகின்றனர். சனாதனம் பற்றி எல்லாரும் தொடர்ந்து பேச வேண்டும்.

டவுட் தனபாலு:

சனாதனம் பற்றி எல்லாரும் தொடர்ந்து பேசிட்டே இருக்கணும்... 'இண்டியா' கூட்டணியில் இருந்து, தி.மு.க., கழற்றி விடப்படணும்... அப்ப தான், காங்கிரசுக்கான சீட்கள்ல, நமக்கு கூடுதலா சில சீட்கள் கேட்க முடியும்னு மாத்தி யோசிக்கிறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா:

சனாதன ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்துகிற கும்பல் வேரோடும், வேரடி மண்ணோடும் களையப்பட வேண்டும். இதை, பா.ஜ. மட்டும் சொல்லவில்லை... மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் மற்றும் சிவசேனா உள்ளிட்ட, 'இண்டியா' கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுபோன்ற சந்தர்ப்பவாதிகள் கூட்டணி சேர்ந்தாலும் உருப்படாது.

டவுட் தனபாலு:

'இண்டியா' கூட்டணியில் இருக்கும் கம்யூ.,க்களை தவிர, வேற யாருமே சனாதன எதிர்ப்பு கருத்தை ஏத்துக்க மாட்டாங்க... தி.மு.க.,வினர் இப்படியே ஏறுக்கு மாறா பேசிட்டு இருந்தா, 'இண்டியா' கூட்டணி இருக்கும்; ஆனால், அதுல, தி.மு.க., இருக்குமா என்பது, 'டவுட்' தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை