உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியை தாருங்கள் 6 நாளில் மாற்றம் தருவேன்

ஆட்சியை தாருங்கள் 6 நாளில் மாற்றம் தருவேன்

நேபாளத்தில், தொடர்ந்து ஊழல் ஆட்சி நடந்தது. அங்கு, ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தினர். தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்; தேர்தல் வாயிலாக ஏற்படும். ஊழல் தி.மு.க., ஆட்சி இருக்க கூடாது. என்னிடம் ஆட்சியை தந்தால், அடுத்த 6 நாளில் மாற்றம் தருவேன். பஞ்சாபில்தான் போதை பொருள் பழக்கம் அதிகமாக இருந்தது. தற்போது தமிழகத்தில் அதிகமாகி உள்ளது. காவிரியின் மிகப்பெரிய கிளை ஆறு கொள்ளிடம். கடந்த 2022-ல், அமைத்த 26 மணல் குவாரிகளில் 11 மணல் குவாரிகளை கொள்ளிடத்தில் தி.மு.க., அரசு கொண்டு வந்தது. எங்களுக்கு மணல் குவாரி வேண்டாம். தடுப்பணை வேண்டும் . ஆதனுார் -- குமாரமங்கலம் தடுப்பணை 15 ஆண்டு களாகியும் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. - அன்புமணி, தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Venugopal S
செப் 20, 2025 10:10

ஆறு மாசம் ஆச்சு, இவரால் இன்னும் குடும்ப கட்சி பிரச்சினையையே தீர்க்க முடியவில்லை, தமிழகத்தின் பிரச்சினைகளை இவர் ஆறு நாட்களில் தீர்த்து விடுவாராம், நம்பச் சொல்கிறார்!


பாலாஜி
செப் 20, 2025 08:25

முதலில் பாமகவில் மாற்றம் ஏற்படுத்தி காட்டுங்க அன்புமணி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை