மேலும் செய்திகள்
தமிழ் மிகவும் உன்னதமான மொழி: கவர்னர் ரவி புகழாரம்
4 hour(s) ago | 2
பழனிசாமி கனவு நிறைவேறியது: த.வெ.க., செங்கோட்டையன் கருத்து
4 hour(s) ago | 3
தொண்டர் குடும்பத்துக்கு பழனிசாமி ரூ.10 லட்சம் நிதி
4 hour(s) ago
சென்னை: சென்னையில் இன்று (டிச.,02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.96,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 11,980 ரூபாய்க்கும், சவரன் 95,840 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 192 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை, தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையில் ஆபரணங்கள் விற்பனையாகின.நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து, 12,070 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து, 96,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (டிச.,02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.96,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.12,040க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 196 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. சில வாரங்களுக்கு பின் மீண்டும் தங்கம் விலை கிராம் 12,000 ரூபாயையும், சவரன் 96,000 ரூபாயையும் தாண்டி, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
4 hour(s) ago | 2
4 hour(s) ago | 3
4 hour(s) ago