| ADDED : நவ 02, 2025 01:26 AM
அ.தி.மு.க.,வுக்கு எதிராக செங்கோட்டையன் வழக்கு தொடரட்டும்; எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பழனிசாமிக்கு முன் பிறந்தவர் என்ற ஒரு தகுதி மட்டுமே செங்கோட்டையனுக்கு உள்ளது. முதல்வர் வாய்ப்பு, இரண்டு முறை வந்ததாகச் சொல்லும் செங்கோட்டையன், அதை ஏன் விட்டுக் கொடுத்தார் என்பதையும் சொல்ல வேண்டும். ஜெயலலிதா இருக்கும்போதே, முதல்வராக வர வேண்டும் என செங்கோட்டையன் ஆசைப்பட்டார். அதை, கட்சி நிர்வாகிகள் ஆதாரத்துடன் ஜெயலலிதாவிடம் சொன்னதால், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. கோடநாடு வழக்கில் பழனிசாமி குற்றவாளி என்றால், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது ஏன்? குற்றவாளி என்றால், கைது செய்திருக்கலாமே. தி.மு.க.,வுக்கு திராணி இருந்தால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதை செய்திருக்க வேண்டும். அ.தி.மு.க.,வில் ராஜாவாக இருந்த செங்கோட்டையன், துரோகிகளிடம் சேர்ந்து கூஜா துாக்கச் சென்று விட்டார். - சீனிவாசன் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,